Chinnanjiru Kiliye

Chinnanjiru Kiliye Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆரிராரிரோ
ஆரிராரிரோ
ஆரிராரிரோஆரிராரிரோ
ஆரிராரிரோஆரிராரிரோ

சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும்
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா

சின்னஞ்சிறு கிளியே

சுகமே நினத்து சுயம்வரம் தேடி
உடனே தவிக்கும் துயரங்கள் கோடி
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ
அன்பு வழி சேருமோ
கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ
வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்


சின்னஞ்சிறு
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா வேடிக்கை தானடா
சின்னஞ்சிறு கிளியே

மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
என்னை நீ தேடி இணைந்தது பாவம்
எல்லாம் நீயே எழுதிய கோலம்
இந்த நிலை காணும் பொழுது
நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ ஓஓ

சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
சின்னஞ்சிறு கிளியே
சித்திரப்பூவிழியே