Devan Vanthandi

Devan Vanthandi Song Lyrics In English


தேவன் வந்தான்டி
ஒரு தீபம் கொண்டாடி
காதல் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி

தேவன் வந்தான்டி
ஒரு தீபம் கொண்டாடி
காதல் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி

ஆஇமய மலைச் சாரலுக்கு
நன்றி சொல்லடி

யார்க்கும் இந்த வகை முதலிரவு
வந்ததல்லடி

தேவன் வந்தான்டி
ஒரு தீபம் கொண்டாடி

காதல் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி

ஆவியோடு கலந்து விட்டான்
கொஞ்சம் முன்னாடி
என் அங்கமெல்லாம் அவனுக்கொரு
அழகு கண்ணாடி
ஆவியோடு கலந்து விட்டான்
கொஞ்சம் முன்னாடி
என் அங்கமெல்லாம் அவனுக்கொரு
அழகு கண்ணாடி

காதல் இளம் மங்கை இவள்
கால்கள் தள்ளாடி
காதல் இளம் மங்கை இவள்
கால்கள் தள்ளாடி
என் கைப்பிடியில் சாய்ந்து விட்டாள்
கவிதை பண்பாடி கவிதை பண்பாடி

தேவன் வந்தான்டி
ஒரு தீபம் கொண்டாடி

காதல் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி

பூவை இவள் உடலைச் சுற்றி
பூவை போடடி

நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும்
புடவை ஏனடி

பூவை இவள் உடலைச் சுற்றி
பூவை போடடி


நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும்
புடவை ஏனடி

தேடி வைத்த கனியை எல்லாம்
மூடி வையடி
தேடி வைத்த கனியை எல்லாம்
மூடி வையடி

நல்ல தேன் வழியும்
இதழ்களிருக்க
கனிகள் ஏனடி கனிகள் ஏனடி

தேவன் வந்தான்டி
ஒரு தீபம் கொண்டாடி

காதல் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி

தஞ்சம் என்று வந்து விட்டேன்
தழுவச் சொல்லடி
நான் தாய்மை கொள்ள துணிந்து விட்டேன்
தயக்கமென்னடி
தஞ்சம் என்று வந்து விட்டேன்
தழுவச் சொல்லடி
நான் தாய்மை கொள்ள துணிந்து விட்டேன்
தயக்கமென்னடி

தமை மறந்து மயங்குதற்கு
நல்ல நாளடி
தமை மறந்து மயங்குதற்கு
நல்ல நாளடி
என்றும் தனிமையிலே இனிமையுண்டு
கதவை மூடடி

ஆஇமய மலைச் சாரலுக்கு
நன்றி சொல்லடி

யார்க்கும் இந்த வகை முதலிரவு
வந்ததல்லடி

தேவன் வந்தான்டி
ஒரு தீபம் கொண்டாடி

காதல் கொண்டாடி
இருவர் : மலர் கட்டில் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி
மலர் கட்டில் கொண்டாடி