Dhada Dhada

Dhada Dhada Song Lyrics In English


பாடலாசிரியர் : ஸ்ரீமணி

தட தடவென ரயில் வரும் சத்தம் எதிரொலிக்கிது இருதயம் மொத்தம் பட படக்குது அவள் இமை கொஞ்சம் அடை மழையினில் நனையுது நெஞ்சம்

அவள் அடித்திடும் விசில் ஒலிகளில் கசல் கவிதையின் சாயல் தேன் குடித்தது போல் திரிந்தேனே பிரமிடுகளின் அருகினில் ஒரு சிறு எறும்பினை போலே அவள் எதிரினில் நான் உணர்ந்தேனே

தட தடவென ரயில் வரும் சத்தம் எதிரொலிக்கிது இருதயம் மொத்தம் பட படக்குது அவள் இமை கொஞ்சம் அடை மழையினில் நனையுது நெஞ்சம்

நதிகளின் திசையை பறவைகள் அறியும் அவள் வரும் திசையை என் இதயம் அறியும் அவள் முகம் தெரியும் ஒவ்வொரு முறையும் முதல் முறை போலே என் விழிகள் விரியும்

அரைகுறையாய் உறக்கம் அலை அலையாய் மயக்கம் அருகிருந்தால் அதுவே போதும்

தெரு முனையில் நடப்பாள் மறு முனையும் அதிரும் அவளின் அழகின் உயரம் அளக்கும் கருவி இல்லையே


தட தடவென ரயில் வரும் சத்தம் எதிரொலிக்கிது இருதயம் மொத்தம் பட படக்குது அவள் இமை கொஞ்சம் அடை மழையினில் நனையுது நெஞ்சம்

சிறகில்லை பறந்தேன் வழி இல்லை நடந்தேன் அவள் முகம் பார்க்க என் நாட்கள் துடிக்கும்

கரு நிற கூந்தல் செருகிய பூவில் ஒரு இதழ் கிடைத்தால் என் உலகம் மணக்கும்

நடு கடலென மௌனம் சுமந்திடும் என் இதயம் திடும் என அவள் பார்த்தால் துள்ளும் அலைவரிசையின் அழகி பண்பலையில் உருகி விரலும் விரலும் உரசும் நிமிடம் மின்னல் அடிக்குமே

தட தடவென ரயில் வரும் சத்தம் எதிரொலிக்கிது இருதயம் மொத்தம் பட படக்குது அவள் இமை கொஞ்சம் அடை மழையினில் நனையுது நெஞ்சம்