Enakku Oru Magan

Enakku Oru Magan Song Lyrics In English


கூவா கூவா கூவா கூவா
கூவா கூவா கூவா கூவா

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
மனக் குறை ஏதும் இன்றி பறப்பான்
இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை
திறப்பான்ஆஅஆ

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்

கல்வியில் என் பிள்ளை கலைவாணனோ
ஓஓஒ
கற்பனை ஸ்வரம் பாடும் இசை ராஜனோ
ஓஓஒஓஒஓஒ
தில்லியில் அரசாளும் ஒரு மன்னனோ
ஒஓஒ
தேனிசைக் குழல் ஊதும்
சிறு கண்ணனோ

சொல்ல முடியாத செல்வச் செழிப்போடு
நல்ல வழி என்றும் வாழ்வான்
வெல்ல முடியாத வீரச் செறுக்கோடு
உள்ளத் துணிவோடு ஆள்வான்

இல்லை எனும் வார்த்தை இல்லை
என்று செய்வான் என் பிள்ளை
தெள்ளத் தெளிவாக உள்ளக் கனிவாக
திசைகள் அனைத்திலும் தினமும் வலம் வர

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்




நாட்டுக்கு என்னாலே தொல்லை இல்லை
நான் பெறப் போவது ஒரே ஒரு பிள்ளை
தாலாட்ட வேறாரும் தேவை இல்லை
தட்டாமல் கேட்பானே தாயின் சொல்லை

இசையில் பல நாட்டை
இழுத்து வசம் ஆக்கும்
இளையராஜாவைப் போலே
திசைகள் எங்கெங்கும் வெற்றிக் கொடி நாட்டி
ஏறி வருவானே மேலே
போற்றி நான் பெற்ற செல்வம்
மாற்றுக் குறையாத தங்கம்

சேர்த்து புகழ் மாலை
சூட்டி புவி யாவும்
ஜெய கொடி பறந்திட
திருமகள் அருள் துணையுடன்

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்
மனக் குறை ஏதும் இன்றி பறப்பான்
இந்த மனிதர்கள் ஞானக் கண்ணை
திறப்பான்ஆஅஆ

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்