Engiruntho

Engiruntho Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள்
மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்



நீங்காமல் தானே
நிழல்போல நானே
வருவேன் உண் பின்னோடு
எந்நாளுமே

பூப்போன்ற மனதை
பொல்லாத மனதாய்
தவறாக எடைபோட்டு
சென்றாலும் தான்

பாலைப்போல கள்ளும் கூட
வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது
உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம்
இந்த பால் மனம்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்




பூர்வீகம் உனக்கு
எதுவென்று எனக்கு
மறைத்தாலும்
என் கண்கள் ஏமாறுமா

புரியாத புதிரா
விளங்காத விடையா
இருந்தாலும் உண்மைகள்
பொய்யாகுமா

என்னைக் கண்டு
அச்சம் கொள்ளத் தேவையில்லையே
வேலி மீது குற்றம் சொன்ன
தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும்
நாள் வரும்
அந்த நாள் வரும்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள்
மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்