Enna Machchaan

Enna Machchaan Song Lyrics In English


என்ன மச்சானே
நீ இப்படி பண்ணிப்புட்டே
என் நிலைய பாத்துட்டு
எங்கம்மா கேப்பாளே
என்ன சொல்றது
நான் என்னா சொல்றது
என்னா சொல்றது அம்மா
என்னா சொல்றது
நான் என்னா சொல்றது

ஏன்டி புள்ள நீ
இப்படி நடுங்குற
நான் என்ன பண்ணிட்டேன்
நீ எதுக்கு கலங்குறே
ஏதோ சொல்லிக்கோ
நீ ஏதோ சொல்லிக்கோ

ஏதோ சொல்லிக்கோ
நீ ஏதோ சொல்லிக்கோ
போடி போ ஏதோ சொல்லிக்கோ
நீ ஏதோ சொல்லிக்கோ

பொடவ கலைஞ்சு போச்சு
பூவும் கசங்கி போச்சு
நெத்தி வேர்வையால
சாந்து பொட்டும் கரைஞ்சு போச்சு

ஒதுங்கி ஒதுங்கி பார்த்தேன்
நான் ஒங்கிட்டதான்யா தோத்தேன்
என்ன சொல்றது நான் என்னா சொல்றது
ஹ அப்பா என்ன சொல்றது
நான் என்னா சொல்றது ஆஹ்ன்

அட சொல்றேன் கேளு
துடுக்குக்கார காளை தொரத்தி வந்ததாலே
துவண்டு போச்சு சேலை துணிஞ்சு புளுகு மேலே
ஹ்க்கும்

துடுக்குக்கார காளை
தொரத்தி வந்ததாலே
துவண்டு போச்சு சேலை
துணிஞ்சு புளுகு மேலே

மெரண்டு மெரண்டு கீழே
விழுந்துவிட்டது போலே
ஏதோ சொல்லிக்கோ
ஹா
நீ ஏதோ சொல்லிக்கோ
அவ்ளோதான்
ஏதோ சொல்லிக்கோ
நீ ஏதோ சொல்லிக்கோஹான்


கன்னம் செவந்து போச்சு
சின்ன காயம் கூட ஆச்சு
என்ன மருந்து போட்டு
அத எப்படி மறைக்க போறேன்

சிரிச்சு சிரிச்சு பேசி
என்ன சிக்க வச்சுட்டியே
என்ன சொல்றது
நான் என்னா சொல்றது
அம்மா என்ன சொல்றது
நான் என்னா சொல்றது

பழுத்து இருந்துச்சு கொய்யா
அது பளபளத்துச்சு மெய்யா
ஹான்
பசி எடுத்துச்சு கிளிக்கு வந்து
பழத்த கடிச்சு புடிச்சு
ஆஹான்

பழுத்து இருந்துச்சு கொய்யா
அது பளபளத்துச்சு மெய்யா
பசி எடுத்துச்சு கிளிக்கு வந்து
பழத்த கடிச்சு புடிச்சு

ரசிச்சு ரசிச்சு தின்ன கிளி
பறந்துடுச்சுன்னு வெளியே
ஏதோ சொல்லிக்கோ
ஹன்
நீ ஏதோ சொல்லிக்கோஏய்
ஏதோ சொல்லிக்கோ
நீ ஏதோ சொல்லிக்கோ

ஹான் என்ன சொல்றது
நான் என்னா சொல்றது
ஹான் என்ன சொல்றது
நான் என்னா சொல்றது

ஆ ஏதோ சொல்லிக்கோ
நீ ஏதோ சொல்லிக்கோ