Enna Petha Devadhaiye

Enna Petha Devadhaiye Song Lyrics In English


இசை அமைப்பாளர்  : சி சத்யா

என்ன பெத்த தேவதையே

என்னுடையே தேவதையே கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா அன்புகொண்ட பார்வையிலே இன்பம் கொண்டு வந்தவளே மூச்சுக்கான காத்தும் நீ தானா

தனி மரமா உலகில் நின்னேனே அட மழையா உனையே கண்டேனே பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே

சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே துணையான தோள்கள் நீ தானே கரையெல்லாம் நீங்குன நெலவாட்டம் மாறுனேன் வாழி காட்டும் வானம் நீ தானே

நெஞ்சுக்குள்ள ஏதுமில்ல நெனப்புக்கு யாருமில்ல உனையே உனையே மனசிப்போ மறப்பதில்ல

புத்தி தந்த பூ மரமே என்ன தொட்ட ஓங்கரமே மனச மனச மந்திரமா மாத்துதிங்கே

ஒரு வலி வந்தா துடிப்பேனே நான் தன்னால ஏங்கதி நீ தான் வாழ்வேனே இனி உன்னால பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே


சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே துணையான தோள்கள் நீ தானே கரையெல்லாம் நீங்குன நெலவாட்டம் மாறுனேன் வாழி காட்டும் வானம் நீ தானே

கோயில் குளம் சுத்துனாலும் சொல்லாமலே கூட வரும் மலையே மலையே என்ன காக்கும் தெய்வம் நீயே

பார்வையில புரிய வைக்கும் வார்த்தையில வலிய நீக்கும் மழையோ வெயிலோ உன் அன்பு கொட விரிக்கும்

சிறு ஒளி நானே தொலித்தேனே அது உன்னால கண்ணு இம போல இணஞ்சோமே இப்போ தன்னால பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே

சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே துணையான தோள்கள் நீ தானே கரையெல்லாம் நீங்குன நெலவாட்டம் மாறுனேன் வாழி காட்டும் வானம் நீ தானே

என்ன பெத்த தேவதையே என்னுடையே தேவதையே கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா