Ettukattu Vaasal Veedu

Ettukattu Vaasal Veedu Song Lyrics In English


எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி

வாசலிலே கட்டி வச்ச வாழைமரம் வாழும் நம்ம குடும்பம் ஆலமரம் பூஜை அரை முழுவதும் பூவின் மணம் பிள்ளை ரெண்டும் ஓடி ஆடும் நந்தவனம்

நல்ல காலம் பொறந்தது மாமா நெனச்சது நடந்தது மாமா நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா மனசு இப்ப குளிர்ந்தது மாமா

எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி

கட்டின புருஷன் பொண்டாட்டி மன ஒத்துமையோட இங்கு உழைச்சா எந்த லட்சிய கனவும் நிறைவேறும் அஷ்டலட்சுமி நமைத் தேடும்

மஞ்சளும் குங்குமம் சேர்ந்தா மணக்கும் மலைத் தேனும் பாலும் சேர்ந்தா இனிக்கும் நல்ல கணவன் மனைவிக்கிது பொருந்தும் நம்ம குடும்பம் கோபுரம்தான்

கண்ணுக்கு கண்ணான மாமன் என் மாமன் கலிக்கால லோகத்தில் வாழும் ஸ்ரீராமன்

மனைவி மன நிலையை மதிப்பேன் அவ மயங்கும் போது நெஞ்சில் அணைப்பேன் கட்டின துணிய கூட நான் துவைப்பேன் தினம் சமையல் செய்து கொடுப்பேன்

நல்ல காலம் பொறந்தது மாமா நெனச்சது நடந்தது மாமா நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா மனசு இப்ப குளிர்ந்தது மாமா

எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி


அஞ்சு ரெண்டு வருஷங்கள் போனா ஒரு மஞ்சள் நீராட்டும் இங்கு இருக்கு அட பொம்பளை புள்ளயின்னா லேசா பணம் சேர்க்கணுமே ராசா

ஓதங்கத்துலே பத்து செட்டு வளையல் சீர்த்தட்டு மேலே நோட்டுக் கட்டு குவியல் ரெண்டு வங்கி சரடு ஒட்டியாணம் மகள் திருமண சீர் தருவேன்

பொண்ணுக்கு பேர்க்காலம் நான்தான் பாத்திடனும் பொறந்ததுமே பேரப்புள்ளய நான்தான் தூக்கிடணும் வளரும் தலைமுறைக்கு உழைப்போம் அவர் வாழ வசதி செய்து கொடுப்போம் நடைப் போட்டு பிள்ளைகளை வளர்ப்போம் இது தந்தை தாயின் கடமை

தலை மேலே ஆயிரம் பொறுப்பு உனக்கெதுக்கு சில்மிஷ சிரிப்பு ஆஹாநாடியிலே இருக்குது துடிப்பு நரை முடிக்கு அடிக்கணும் கறுப்பு

எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி எட்டுக்கட்டு வாசல் வீடு கட்டி ஏத்தி வச்சான் இந்த சிங்கக்குட்டி

வாசலிலே கட்டி வச்ச வாழைமரம் வாழும் நம்ம குடும்பம் ஆலமரம் பூஜை அரை முழுவதும் பூவின் மணம் பிள்ளை ரெண்டும் ஓடி ஆடும் நந்தவனம்

நல்ல காலம் பொறந்தது மாமா நெனச்சது நடந்தது மாமா ஆஹான் நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா மனசு இப்ப குளிர்ந்தது மாமா

நல்ல காலம் பொறந்தது மாமா நெனச்சது நடந்தது மாமா ஏஹே நல்ல வாழ்க்கை அமைஞ்சது மாமா மனசு இப்ப குளிர்ந்தது மாமா