Hey Naano Vayasu

Hey Naano Vayasu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கீத ராஜன்

ஹே நானோ வயசுப் புள்ள
ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல
இது எதனால அட அதனால

ஒரு சாயங்கால காத்து
என்ன தடவிப் போச்சு நேத்து
வந்து முழுசா தழுவாதா
என் முகவரி தெரியாதா
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண

ஹே நானோ வயசுப் புள்ள
ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல

ராவெல்லாம் பகலாக
பகலெல்லாம் ராவாக
நான் கொண்ட அழகெல்லாம்
அனலில் மெழுகாக
என் கண்ணே பகையாக என் தேகம் சுமையாக
தனியாகி போனேனே தரையில் மீனாக

உன்னோடு நானாட
ஹே பன்னீரில் நீராட
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண

ஹே நானோ வயசுப் புள்ள
ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல


அறியாத பொண்ணாக
ஆளாகி நின்னேனே
அங்கங்கே தொட்டானே
ஆச மச்சானே ஹேய்

கண்ணென்றால் இமையோட
பெண்ணென்றால் ஆணோட
எம் மனசு என்னாச்சு போகுது உன்னோட

அச்சாணி போடாத
சிங்காரத் தேரானேன்
ஹோய் என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண

ஹே நானோ வயசுப் புள்ள
ஹே நானா தந்ததனன்னானா
இது எதனாலதந்ததனன்னானா

ஒரு சாயங்கால காத்து
என்ன தடவிப் போச்சு நேத்து
வந்து முழுசா தழுவாதா
என் முகவரி தெரியாதா
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண