Innum Enna |
---|
பெண் ஹே
ஆண் ஹே
இன்னும் என்ன பேச்சு
இப்போ வெற்றியடஞ்சாச்சு
அவங்க ஆசை என்ன ஆச்சு
அந்த மீசை எங்க போச்சு
உங்க காலம் கனிஞ்சாச்சு
எங்கக் கைகள் ஒசந்தாச்சு
ஒரு பூவே புயலாச்சு
நல்ல நேரம் பொறந்தாச்சு ஹேய்
இன்னும் என்ன பேச்சு
இப்போ வெற்றியடஞ்சாச்சு
அவங்க ஆசை என்ன ஆச்சு
அந்த மீசை எங்க போச்சு
சொன்னாலும் கேக்காத ஊருக்கு நீங்க
சொன்னீங்க பாடத்தத்தான்
கை கட்டி நிக்காம கண்ணால பேரே
கலச்சீங்க வேடத்தத்தான்
அம்மா உன் வரவாலே ஊரெல்லாம் இனி மேலே
ஆனந்தப் பண் பாடணும்
பொன் மால பூ மால புகழ் மால எல்லாமே
தோள் மீது நீ சூடணும்
எல்லோரும் கூடி வாழ்த்துப் பாட
ஆண் நூறாண்டு நீ வாழணும்
ஏழைகள் நாங்கள் எண்ணம் காண
பெண் எந்நாளும் நீயாளணும்
எல்லாம் திருநாள் நமக்கு
அம்மா உன் ராஜாங்கம் என்றென்றும் வாழ்க
இன்னும் என்ன பேச்சு
ஹெ ஹேய்
இப்போ வெற்றியடஞ்சாச்சு
ஆஹா
அவங்க ஆசை என்ன ஆச்சு
ஆஹா
அந்த மீசை எங்க போச்சு
ஏஹெ ஹேய்
எப்போதும் உண்மைகள் தோற்காது என்றும்
அப்போது நீ சொன்னது
அப்பாவி ஏழைக்கு உப்பாக வாழும்
அம்மா உன் பேர் சொல்லுது
அள்ளாத துட்டில்ல அடிக்காத காசில்ல
அப்போ நம் அய்யாவுக்கு
குட்டெல்லாம் ஒடஞ்சாச்சு
கொடை எல்லாம் கவுந்தாச்சு
குறை ஏது அம்மாவுக்கு
பூவோடு சேரும் நாரப் போல
பெண் உன்னோட ஊர் சேருது
பொன்னான காலம் வந்ததாலே
ஆண் ஓடாத தேர் ஓடுது
இருட்ட வெரட்டும் வெளக்கு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
வெற்றியடஞ்சாச்சு
ஹே ஹே
இப்போ இன்னும் என்ன பேச்சு
ஹே ஹே
அவங்க ஆசை என்ன ஆச்சு
ஹே ஹே
அந்த மீசை எங்க போச்சு
ஹே ஹே
உங்க காலம் கனிஞ்சாச்சு
ஹே ஹே
எங்கக் கைகள் ஒசந்தாச்சு
ஹே ஹே
ஒரு பூவே புயலாச்சு
ஹே ஹே
நல்ல நேரம் பொறந்தாச்சு ஹேய்
ஹே ஹே
வெற்றியடஞ்சாச்சு
எஹேய்
இப்போ இன்னும் என்ன பேச்சு
ஹெ ஹேய்
தோற்றவர்கள் வாழ்க
ஹா ஹா
தோற்றவர்கள் வாழ்க
ஹே ஹே ஹே ஹேய்