Innum Enthan |
---|
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
கண்ணிலே வந்தது நதியோ
அம்மம்மா இது தான் விதியோ தாயே
இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
பிள்ளை போல் ஒரு தந்தை
இங்கு பேதை ஆனதென்ன
அன்பு காட்டிய நெஞ்சம்
இன்று ஊமை ஆனதென்ன
அவர் நெஞ்சில் ஞாபகம் வேண்டும்
அதற்க்கு இங்கு நீ வர வேண்டும்
மணக்கோலம் கொண்டதும் சொல்லு
ஊர்கோலம் சென்றதும் சொல்லு
தனியே உந்தன் பிள்ளை தவிப்பது பாராயோ ஓ
இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
கண்ணிலே வந்தது நதியோ
அம்மம்மா இது தான் விதியோ தாயே
இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
அன்னை கை வலையோசை
மணி ஓசை ஆகட்டுமே
தந்தை காதினில் வந்து
தேன் போல பாயட்டுமே
உயிரோடு அன்னையும் இல்லை
உணர்வோடு தந்தையும் இல்லை
கண்ணீரில் வாழ்ந்திடும் பிள்ளை
எனக்கிங்கு ஆறுதல் இல்லை
இதயம் என்ற ஒன்று இருப்பது கூடாதோ
இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
கண்ணிலே வந்தது நதியோ
அம்மம்மா இது தான் விதியோ தாயே
இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும்
அன்பு தாயின் தாலாட்டு
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ