Ivalaa

Ivalaa Song Lyrics In English


விழிகளில் விழுந்தது உனதுருவம்
இது கனவா
நிஜமென தெரிந்தும் மனததுவும்
மறுக்கிறதா

இவள் கை விரல்களை பிடித்திடவே
மனம் தயங்கியதா
இவளது கண் விழி அசைவினிலே
உயிர் தொலைந்திடுமா

ஏன் இங்கு வந்தாய் பெண்ணே
உன் அழகிய நிமிடங்கள் கொல்கிறதே
பதினொரு வசந்தங்கள் கழித்து
பறவையாய் என்னுள் அமர்வது ஏன்

வலியால் இனி தவிப்பேனோ
இவளால் இனி சிரிப்பேனோ
நின்ற என் இதயம் துடிக்குதடி
துடிக்குதடி

இவளா இவளா
என்னை தொட்டு சென்றவள்
மலர் மேல் பனியாய்
நான் விழுந்தேன் இவள் பார்வையில்



இன்பமே இன்பமே
ஏன் நிஜமாய் வந்தாய்
பிம்பமே பிம்பமே
ஏன் நிழலாய் போனாய்


தீயென தீயென
நான் தெரிந்தே வந்தேன்
நீரென நீயடி
என்னை குளிர செய்தாய்

காலம் காற்றோடு கலந்தது ஏன்
நானா இங்கின்று கைதி
காதல் அன்றொரு முடியவில்லை
சொல்கிறேன் உனக்கொரு செய்தியடி

இன்று மண்ணோடு வீழ்வேனோ
வாழ்க்கை உன்னோடு வேண்டும்
நீ வா அந்நாட்கள்
மீண்டும் வேண்டும் நீயே வேண்டும்

இவளா இவளா
என்னை விட்டு சென்றவள்
வழியை தந்தாள்
நான் உடைந்தேன் உன்னால் இன்று

ஒரு நாள் போதும்
உன்னோடு வாழ தோணுதே
நிழலாய் இல்லை
சிறு நிஜமாய் நீ சேரடி

இவளால் இனி சிரிப்பேனோ
நின்ற என் இதயம் துடிக்குதடி