Jaan Pillai Aanalum

Jaan Pillai Aanalum Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

ஜாண் பிள்ளை ஆனாலும் நீ ஆண் பிள்ளைதான்யா நீ சின்னவன் ஆனாலும் என் மன்னவன்தான்யா

காலம் எல்லாம் உன்னோடதான் கூட வர ஆசப் பட்டேன் கண்ணாலம்தான் கட்டி வச்சு தள்ளி வெச்சா என்ன செய்வேன்

ஜாண் பிள்ளை ஆனாலும் நீ ஆண் பிள்ளைதான்யா நீ சின்னவன் ஆனாலும் என் மன்னவன்தான்யா

மூக்கு முழி பாக்காமத்தான் மாலை இட்ட தியாகியடி காசு பணம் கேக்காமத்தான் கட்டிகிட்ட மச்சானடி

பண்ணிய புண்ணியம்தான் உன் சோடியா சேந்துகிட்டேன் எப்பவும் இப்படியே வாழ சாமிய நேந்துகிட்டேன்

போடி புண்ணியம் இல்லையடி நான் பண்ணிய பாவமடி கட்டிலும் மெத்தையும்தான் என்ன கேலியா பேசுதடி

ஒன்னப் போல நானும் தானே உள்ளுக்குள்ள வாடுறேனே என்ன செய்ய தொட்டா இப்ப தோஷம் வரும் ராசாவே

ஜாண் பிள்ளை ஆனாலும் நீ ஆண் பிள்ளைதான்யா நீ சின்னவன் ஆனாலும் என் மன்னவன்தான்யா


பேசிப் பேசி ஜெயிக்கிறது பொண்டாட்டிங்க வேடிக்கதான் பேச்சக் கேட்டு மயங்குறது ஆம்பளைங்க வாடிக்கதான்

நெத்தியில் வச்சிருக்கும் வட்டப் பொட்டுல நீ இருக்கே தல மத்தியில் வச்சிருக்கும் வாசப் பூவிலும் நீ இருக்கே

ஐஸ் ஐஸ் மன்மதன் போலவேதான் பொண்ணு மாப்பிள தேடிடுவா அடி என்னப் போல் வாச்சுப் புட்டா உன்னப் போலதான் ரீல் உடுவா

கொஞ்சினாக்கா கொண்டாட்டம்தான் மாமா வந்தா திண்டாட்டம்தான் கொஞ்சம் பொறு காலம் வரும் நேரம் வரும் ராசாவே

ஏஜாண் பிள்ளை ஆனாலும் நான் ஆண் பிள்ளை தான்டி நான் சின்னவன் ஆனாலும் உன் மன்னவன் தான்டி

காலம் எல்லாம் உன்னோடதான் கூட வர ஆசப் பட்டேன் கண்ணாலம் தான் கட்டி வச்சு தள்ளி வெச்சா என்ன செய்வேன்

ஜாண் பிள்ளை ஆனாலும் நீ ஆண் பிள்ளைதான்யா நீ சின்னவன் ஆனாலும் என் மன்னவன்தான்யா