Jathi Ennada Jathi

Jathi Ennada Jathi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ஜாதி என்னடா ஜாதி அது
ஜனங்கள புடிச்ச வியாதி
ஜாதி என்னடா ஜாதி அது
ஜனங்கள புடிச்ச வியாதி
பொறந்தா அதன் பேர் கொழந்த
போனா அதன் பேர் பொணம்தான்
ஆண் பொறந்தா அதன் பேர் கொழந்த
பெண் போனா அதன் பேர் பொணம்தான்

வர்ணமும் கிர்ணமும் இடையிலே வந்தது
இடைஞ்சல தந்தது எதுக்கது ஒதுக்கு
ஜாதி என்னடா ஜாதி

ஜனத்தொகையை காட்டிலும்தான்
ஜாதிதான் இருக்குது
ஜாதிக்கொரு சங்கம் வச்சு சண்ட நடக்குது
மூணு நிறம் கொடியிலதான் இருந்தா இருக்கட்டும்
நாலு நேரம் நமக்கெதுக்கு ஒண்ணா சேரட்டும்

இமயமும் குமரியும் இணைந்திட இருப்பது
இந்தியா இந்தியா
இதிலுள்ள மனிதரில் வகுப்புகள் பிரிப்பது
நீதியா நீதியா

வாழ்ந்தாலும் இங்கே ஒன்றாக வாழ்வோம்
வீழ்ந்தாலும் இங்கே ஒன்றாக வீழ்வோம்
ஒரு மரத்து பறவைகளாய்
இருக்கின்ற மனிதரை இனங்கண்டு பிரிக்கிற
ஜாதி என்னடா ஜாதி



அடுத்தவரின் குடி கெடுப்பான்
அவன்தான் தாழ்ந்தவன்
அழுதவரின் கண் துடைப்பான்
அவன்தான் உயர்ந்தவன்

இதை தவிர மனிதரிலே பேதமில்லையே
இந்தியராய் பொறந்தவங்க ஒருதாய் பிள்ளையே
புறப்படு புறப்படு போர்த் தொடு போர்த் தொடு
பிரிவுகள் சாகணும்
எழுதணும் எழுதணும் இனியொரு விதி செய்து
அரசியல் சாசனம்

சம நீதி காணும் சமுதாயம் வேணும்
அதனால்தான் இங்கே புது வாழ்வு தோணும்
அதுவரையில் உறக்கமில்லை
உணர்ச்சிகள் கொதிக்குது நரம்புகள் துடிக்குது
ஜாதி என்னடா ஜாதி அது

ஜாதி என்னடா ஜாதி அது
ஜனங்கள புடிச்ச வியாதி
ஜாதி என்னடா ஜாதி அது
ஜனங்கள புடிச்ச வியாதி
பொறந்தா அதன் பேர் கொழந்த
போனா அதன் பேர் பொணம்தான்
ஆண் பொறந்தா அதன் பேர் கொழந்த
பெண் போனா அதன் பேர் பொணம்தான்

வர்ணமும் கிர்ணமும் இடையிலே வந்தது
இடைஞ்சல தந்தது எதுக்கது ஒதுக்கு
ஜாதி என்னடா ஜாதி
ஜாதி என்னடா ஜாதி