Kaadhaley Kannir |
|---|
மற்றும் கோருஸ் ஹூக்ஸ்
காதலே கண்ணீருடன் நானே
காதலே அலைகின்றேன் வீணே
காதலே என் உயிர் நீதானே
எந்தன் தேவதையே வா வா
அன்பே என்னை பிரிந்து செல்லாதே
கனவே நீ கலைந்து செல்லாதே
அன்பால் நான் தவிகின்றேனே
எந்தன் அன்பே நீயே வா
கனவேகலையாதே
என் உயிரேஎனை பிரியாதே
ஹோ ஹோ ஓஒ ஓ
ஹோ ஓஒ
காதல் கொண்டேன் காதல் கொண்டேன்
உன் இடத்தில் நானும் கண்டேன்
அன்பே சகியே உன்னை காண
அனுதினம் ஓடோடி வந்தேன்
ஏனோ உன்னை காணயில்
என் நெஞ்சில் தீயாய் எரியுதடி
கண்ணால் உன்னிடம் பேசயில்
என் கண்ணீர் துளியும் பெருகுதடி
காதலே உன் நினைவால்
அனுதினம் வாடுகிறேன்
கனவே உன்னாலே
என் தூக்கத்தை இழக்கிறேன்
அன்பு சகியே ஆசை ரதியே
உன்னை கண்டதும்
ஓர் உயிர் கலந்தது அன்பில்
கண்ணீர் சுரக்குது ஒரு நெஞ்சில்
இன்று கலந்ததடா என் மூச்சில்
பின்பு மறைந்ததடா அந்த காற்றில்
ஏனோ
காதலே கண்ணீருடன் நீயோ
காதலே அலைகின்றேன் வீணே
காதலே உன் உயிர் நான்தானே
எந்தன் அன்பாய் நீயே வா
அன்பே உன்னை பிரிந்தே செல்வேனோ
கனவை நான் கலைத்து செல்வேனோ
அன்பால் நான் தவிக்க வைப்பேனோ
எந்தன் கள்வா நீயே வா
கனவோ மந்திரமோ
காதல் செய்த தந்திரமோ
கண்ணை உருகிடும் சம்பவமோ
நெஞ்சில் பதிந்திடும் ஞாபகமோ
நீ என்னை தீண்டும் பொழுது
எந்தன் மனமோ சிக்கி தவிக்கிது
என் கண்கள் உன்னை காண
வருடங்களாக தவத்தில் கிடக்குது
ஒரு முறை என் மனதை பாரு
குவிந்திருக்கும் அந்த ஆசைகள் நூறு
நீ செய்தது சரியா சொல்
என் மேல் என்ன தவறா சொல்
தவிக்கிறேன் மறக்கிறேன்
கனவினை சிதைக்கிறேன்
துடிக்கிறேன் நினைக்கிறேன்
தனிமையில் தவிக்கிறேன்
காதலின் போதை தவறா சொல்
கவிதையை உன் கண்ணில் கண்டேன்
அன்பை உன் உயிரில் கொண்டேன்
ஏனோ உந்தன் மூச்சினில் நானும்
இன்று கலந்தேனே
அன்பே உன்னை பிரிந்து செல்வேனோ
கனவை நான் கலைத்து செல்வேனோ
அன்பால் உன்னை தவிக்க வைப்பேனோ
எந்தன் கள்வா நீயே வா
காதலே கண்ணீருடன் நானே
காதலே அலைகின்றேன் வீணே
காதலே என் உயிர் நீதானே
எந்தன் தேவதையே வா வா
அன்பே என்னை பிரிந்து செல்லாதே
கனவே நீ கலைந்து செல்லாதே
அன்பால் நான் தவிகின்றேனே
எந்தன் அன்பே நீயே வா
கனவேகலையாதே
கனவேகலையாதே
என் உயிரேஎன்னை பிரியாதே
என் உயிரேஎன்னை பிரியாதே
பிரியாதேஎன்னை பிரியாதே
செல்லாதேவிட்டு செல்லாதே
பிரியாதேபெண்ணே பிரியாதே
ஹோ ஹோ
செல்லாதே செல்லாதேவிட்டு செல்லாதே
