Kadavul Padaippil |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
கடவுள் படைப்பில்
என்னென்ன அதிசயம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
அழகான அற்புதம்
எல்லா உயிருக்கும்
இங்கு அணைத்து அள்ளி தந்தான்
இந்த மனித குலத்துக்காக
ஒரு தாயை படைத்தது தந்தான்
உயிரில் உயர்ந்தது
இந்த மனித பிறவி தான்
அதிலும் உயர்ந்தது நம்
அன்னை பிறவி தான்
தாயை போலே இங்கு
ஒன்றும் இல்லையே
அதை உணர்ந்தால் போதும்
அதற்க்கு ஈடு இல்லையே