Kandukondain |
---|
கண்டு கொண்டேன்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில்
இங்கே கண்டு கொண்டேன் முருகா
கண்டுகொண்டேன் நான்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில் இங்கே
கண்டு கொண்டேன் முருகா
விழுந்த இடத்தில் மருதமரம்
விழித்த முகத்தில் கந்தர் முகம்
நினைத்து நினைத்துத் துடித்த எனக்கு
கிடைத்த முருகனின் அன்பு வரம்
கண்டு கொண்டேன்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
இடையோடு கூடும் உடை கோவணங்கள்
எவையும் இல்லை ஐயா
ஒரு சூடமேனும் தருவார்கள்
கூட இங்கில்லை ஐயா
தனியாக நிற்கும் முருகா உனக்கு
இனி நானுண்டு ஐயா இனி நானுண்டு ஐயா
ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
வலிமையுண்டு பொறுமையுண்டு
உழைப்பதென்று நினைப்பதுண்டு
உனக்கென்று உழைப்பதென்று நினைப்பதுண்டு
முருகா நான் ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
உருகுதே கண்கள் உருகுதே
பெருகுதே வெள்ளம் பெருகுதே
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
உனது கோயில் மலரும் முருகா
உருகுதே கண்கள் உருகுதே
பெருகுதே வெள்ளம் பெருகுதே
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
உனது கோயில் மலரும்முருகா
நான் சொன்னது உண்மையடா
படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்
படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்
கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்
தந்தாய் கோடி திருமுருகா
சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்
கண்டதும் போதும் வடிவழகா
கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்
தந்தாய் கோடி திருமுருகா
சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்
கண்டதும் போதும் வடிவழகா
அடியவர்க்கு ஒரு விருந்தே
பிணி பல தீர்க்கும் அருமருந்தே
மனதில் இருக்கும் குரு முருகா
மருதமரத்து வேல் முருகா
வேல் முருகாவேல் முருகா