Kandum Kanamal |
---|
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
நினைவுகள் போல
மறதியும் வேண்டும் நேற்றும்
நீங்க நாளை வேண்டும்
தனிமைகள் தீர
துணையும் வேண்டும்
தாங்கும் தோளில்
சாய்ந்திட வேண்டும்
அருகிலே வந்த
போதிலும் ஏனோ தூரமே
நினைவினிலே தேங்கும்
ஞாபகம் நீங்குமோ எந்த நாளுமே
சேருவோம்
சேருவோம் வாழ்வில்
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
ஆஹா ஆஆ
ஆஹா ஆ ஆ
உறவுகள் நீங்கி
வாழும் வாழ்வில் ஏங்கும்
நொடிகள் சுமையென தெரியும்
திரைகடல் ஓடி
தேடும் தேடல் தீரும்
போது தொலைந்தது தெரியும்
சிறகுகள் வாங்கும்
ஆசையில் வானை நீங்கினோம்
விடைகளை தேடும் ஆவலில்
கேள்வி போல் நாளும் தேங்கினோம்
மாறுதல்
ஆறுதல் ஆகுமே
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்
கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்