Kangal Rendum Pesuthey

Kangal Rendum Pesuthey Song Lyrics In English


பாடியவர்கள் : நீருஜன் செகசோதி மற்றும் திவாகர்

இசை அமைப்பாளர் : கௌசிக் சிவலிங்கம்

கண்கள் ரெண்டும் பேசுதே
உள்ளம் உன் வசம் ஆனதே
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்
கள்ளம் இல்லா பெண் அவள்
கரும்கூந்தல் வாசனை ஆயிரமே
கண்ணுக்குள் காண்பவை வைரமே
சொற்கள் யாவும் மின்னுமே
நதியின் அழகைப் போலவே

மனதைக் கேட்டாய்
வசதி கேட்டாய்
நிறத்தைக் கூட நீ கேட்டாய்
எடுத்துத் தந்தேன்
முழுதும் தந்தேன்
உயிரைக்கூட நான் தந்தேன்

ஏனோ ஏனோ இருவிழியில்
காதலைப் புதைத்தாய்
மீண்டும் மீண்டும் மீண்டும்
அதை மறைத்தே
பொய்களை அழித்தாய்
என்னை விட இன்னொருவன் கூட நீ

ஓஓஓஓ
கண்கள் ரெண்டும் பேசுதே
உள்ளம் உன் வசம் ஆனதே
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்
கள்ளம் இல்லா பெண் அவள்
கரும்கூந்தல் வாசனை ஆயிரமே
கண்ணுக்குள் காண்பவை வைரமே
சொற்கள் யாவும் மின்னுமே
நதியின் அழகைப் போலவே


ஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓ

அவளை எண்ணி முழுதும் நம்பி
தினமும் துடிக்கிறேன் வெம்பி
தெரிந்து கொண்டேன்
புரிந்து கொண்டேன்
அவளின் இருமுகம் கண்டேன்
உண்மை உண்மை உண்மை
வௌிவரவே காத்திருந்தேன் அடடா
என்னை என்னை என்னை
அவள் மறக்கும் நேரம் தோன்றும் அடடா

கண்ணீர்களும் ஏமாற்றமும்
தாங்கிட நான்

ஓஓஓஓஓஓ
கண்கள் ரெண்டாய் பேசுதே
உள்ளம் தன் வழி போனதே
எந்தன் காதலில் வலியைத் தந்தவள்
கள்ளம் உள்ள பெண் அவள்
கரும்கூந்தல் வீசி சென்றவளே
ஓஓஓஓஓஓ
கண்ணுக்குள் காண்பது மின்னலே
சொற்கள் யாவும் பொய்களே
நதியின் கரைகள் போலவே

ஆஅ ஆஅஆஅ
கண்கள் ரெண்டாய் பேசுதே
உள்ளம் தன் வழி போனதே
எந்தன் காதலில் வலியைத் தந்தவள்
கள்ளம் உள்ள பெண் அவள்
கரும்கூந்தல் வீசி சென்றவளே
ஓஓஓஓஓஓ
கண்ணுக்குள் காண்பது மின்னலே
சொற்கள் யாவும் பொய்களே
நதியின் கரைகள் போலவே