Kanja Paarva |
---|
ஓர பார்வை உசுர கீறுதே
ஒன்ன பாத்தே மருந்தும் கேட்குதே
மொத்த ஊரும் உறவு ஆகுதே
முழு நிலவும் பகல பாக்குதே
கஞ்ச பார்வை கவிதையாகுதே
கண்ணும் மூட மறந்து போகுதே
ஒன்ன பாக்க உலகம் தேங்குதே
உயிரணுவும் மூச்சு வாங்குதே
எட்டி நீயும் போக கூடும் கவலை
தொட்டிடாம பேச வேணும் பதில்ல
பட்டம் போல வீசும் காத்துல
ஆட்டம் போடுறேன் காதல் கூத்துல
என்ன ஏனோ தூங்க நீயும் விடல
நெஞ்சில நீ ஓட்டிபோற ரயில்ல
கட்டிபோடும் ஆச பேச்சுல
மாலை கோக்குற பாச பூக்கள
கஞ்ச பார்வை கவிதையாகுதே
கண்ணும் மூட மறந்து போகுதே
ஒன்ன பாக்க உலகம் தேங்குதே
உயிரணுவும் மூச்சு வாங்குதே
அடடா உன் வாசம் வீசையில்
இறகா நானும் அல்லாடுறேன்
வெலகாம நீயும் சேர்ந்திட
உசுரே பூக்க கொண்டாடுறேன்
வெயில்லா நீ நெருங்கும் போதுல
குயில போல நான் இசையும் பாடுறேன்
தெருவா நீ தெரியும் போதுல
சழங்க பூட்டி நான் கரகம் ஆடுறேன்
கஞ்ச பார்வை கவிதையாகுதே
கண்ணும் மூட மறந்து போகுதே
ஒன்ன பாக்க உலகம் தேங்குதே
உயிரணுவும் மூச்சு வாங்குதே
புலி வால போல காதல
புடிச்சேன் நானும் விடாமலே
அநியாய ஆசை நெஞ்சுல
அருவா வீசும் தொடாமலே
அலிபாபா வெளக்கு போல நீ
ஒரசி போகையில் வருது பூதமே
இருந்தாலும் உனது காதலால்
அதுவும் போடுதே கொழந்த வேஷமே
ஓர பார்வை உசுர கீறுதே
ஒன்ன பாத்தே மருந்தும் கேட்குதே
ஒன்ன பாக்க உலகம் தேங்குதே
உயிரணுவும் மூச்சு வாங்குதே
உயிரிலேஉயிரிலே