Kanna Neeyum

Kanna Neeyum Song Lyrics In English


கண்ணா
நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா

காலம் மாறினால்
கௌரவம் மாறுமா

நெவர்

நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா

அறிவை
கொடுத்ததோ
துரோணரின் கௌரவம்

அவர் மேல்
தொடுத்ததே அர்ஜுனன்
கௌரவம்

நடந்தது அந்த
நாள் முடிந்ததா
பாரதம்

நாளைய
பாரதம் யாரதன்
காரணம்

நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா


மூன்றடி மண்
கேட்டான் வாமனன்
உலகிலே

மூன்றென
வைத்ததோ மன்னவன்
தலையிலே

வளர்த்த என்
கண்ணனோ தந்தையின்
நெஞ்சிலே

மாறும் அவதாரமே
இதுதான் உலகிலே

நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா

மன்னனின்
கௌரவம் சதுரங்க
நடுவிலே

மரிக்கின்ற
சேனையோ பிள்ளையின்
வடிவிலே

ஆகட்டும் பார்க்கலாம்
ஆட்டத்தின் முடிவிலே
அறுபதை இருபது வெல்லுமா
உலகிலே