Kottukkali Kottu Naayanam |
---|
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே
வெள்ளி மணிச் சத்தம்
துள்ளி குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன்
செல்லக் கயல்களும் நாளும் கூட
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே
சின்னவரும் பார்க்கும் போது
தேகம் மோகம் கேக்குது
மன்னவரும் கூடும் போது
மயக்கமாகுது
கண்ணிரண்டும் ஜாலம் பேசி
காதல் போதை ஏத்துது
பொண்ணு இட்ட தூண்டில்
என்னை போட்டு இழுக்குது
கோடி ஆசை கூடிக் கூடி
கோலம் போடுது
கோலம் போட்டு பாடிப் பாடி
தாளம் போடுது
ராஜராஜனும்
கை கோர்த்த ராணியாகனும்
காதல் சாகரம்
அதில் இன்பத் தோணி போகணும்
ஏழு லோகம் மாலை போட
வாழ்ந்து பார்க்கணும்
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே
வெள்ளி மணிச் சத்தம்
துள்ளி குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன்
செல்லக் கயல்களும் நாளும் கூட
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே
முத்துமணி மாலை போல
மோதிப் பார்க்க ஆசை தான்
வெட்கம் இனி ஓட வேணும்
விலகித் தூரம்தான்
பொட்டு வைத்து பூவைச் சூடி
பார்த்து ஏங்கும் பாவைதான்
தொட்டணைத்து தூக்கும் போது
தீரும் பாரம்தான்
காத்து வாக்கில் பூத்த வாசம்
கன்னி வாசம்தான்
நேத்து பூத்த பூவின் மீது
என்ன பாசம்தான்
மூட மூடவே
என்னோட மோகம் ஏறுது
பாடப் பாடவே
என்னோட பாட்டும் சேருது
தேடத் தேட கோடிக் கோடி
சேதி தெரியுது
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா அன்பே
முத்துத் திரவியமே
வெள்ளி மணிச் சத்தம்
துள்ளி குதித்தொரு தாளம் போட
வெள்ளி அலையுடன்
செல்லக் கயல்களும் நாளும் கூட
கொட்டுக்களி கொட்டு நாயனம்
கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே
பட்டுக் களஞ்சியமே
தொட்டுக் குலவிட வா பெண்ணே
முத்துத் திரவியமே