குச்சிக் குச்சி ராக்கம்மா பாடல் வரிகள்

Starring Arvind Swami, Manisha Koirala
Movie Bombay
Music ByA R Rahman
Lyric By Vairamuthu
SingersG. V. Prakash Kumar, Hariharan, Swarnalatha
Year 1995

Kuchi Kuchi Rakammaa Song Lyrics In English

குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்
சாதி சனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா
ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா

குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
ஹே கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்
சாதி சனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக் குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா

குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே
குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்
கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணி வேருக்கு மண் பிடிக்கும்
ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்

அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும்
அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே
பொம்பளைக்கு கிளி பிடிக்கும்

அள்ளும் பகலுமே நனைந்தாலும்
ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் எடுத்தாலும்
ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்

ஆஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு
போதும் என்னை விட்டு விடு

ஆ ஆ ஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு
போதும் என்னை விட்டு விடு
வெளிச்சம் எரியவிட்டு
வெக்கத்தை அணைத்துவிடு

குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே


குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே
குச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா

ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹை
ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹை
ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஓய்ஓய் ஹையா
ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா
ஹையா ஓய்ஓய் ஓ ஓ

சிறகை நீங்கினால் பறவையில்லை
திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை
உனக்கிது புரியவில்லை

உடலை நீங்கினால் உயிருமில்லை
ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை
உனக்கிது தெரியவில்லை

பூமி சுற்றுவது நின்றுவிட்டால்
புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்று விட்டால்
எந்நாளும் பெண்வாழ்வில் ஏற்றங்கள் இல்லை

பொத்தி வைத்த ஆச வந்து
நெத்தியில துடிக்குது

பொத்தி வைத்த ஆச வந்து
நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக் கொள்ளும்
தூரத்தில் ஒதுங்கி நில்லு

குச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா

குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே
சாமக்கோழி கூவலையே

குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே
சாமக்கோழி கூவலையே

குச்சிக் குச்சி ராக்கம்மா........

Kuchi Kuchi Rakammaa Song Lyrics from movie Bombay. Kuchi Kuchi Rakammaa song sung by G. V. Prakash Kumar, Hariharan, Swarnalatha. Kuchi Kuchi Rakammaa Song Composed by A R Rahman. Kuchi Kuchi Rakammaa Song Lyrics was Penned by Vairamuthu. Bombay movie cast Arvind Swami, Manisha Koirala in the lead role actor and actress. Bombay movie released on 1995