Kudhippen |
---|
தட்டினால் திறக்கும்
என் உலகம் எனக்காய் கிடைத்தால்
அது எனது
கிடைக்காததை நான்
திருடிடும் போது
இந்த உலகெனது
குதிப்பேன் படைகள் தாண்டி
நீயோ சிரிப்பது ஏன்டீ
நானோ எதுவுமிலா ஆண்டி
இருடாதிருடாமுரடா
வேணா மாட்டுவேனா
ஏய்க்கப் பார்ப்பான் பின்னால் பாராய்
தடைவிதித்தால்
அடைத்து வைத்தால்
இங்கு எந்தன் வழி தனிவழியே
ஓஹோ இங்குஅலாதின்
விழுந்தானா
குற்றங்களின் மன்னன் நீதானா
ஓ இல்லை
அம்மா அப்பா என்று இல்லை யாரும்
வயிற்றுக்குத்தான் திருடுகிறேன்
அதை சொல்ல எனக்கிங்கு இல்லை நேரம்
குதிப்பேன் நான் மலையின் மேலே
குதித்தால் நிலம் அதிரும்
எனக்காய் புது வழி உருவாகும்
குதிப்பேன் அத்தடியர்கள் மேலே
அதிலே நீ தடைபோட்டால்
தடையே படியென ஆகுமே
வேகம் வேகம் ஏனோ
அலாதினோ எந்தன் தேனோ
வயிற்றுக்குத்தான் திருடுகிறேன்
இல்லையேல் இது நல்ல நாள்வாள்
குதிப்பேன் அக்குதிரை மேலே
கோட்டை அம்மதிலிலே
பறப்பேன் பேரழிவின் மேலே
வீசும் அப்புயல் போலே
ஆனால் சிறகுகள் இல்லை
ஏதும் தடை இல்லை
குதித்திட பிறந்தவன் நான்