Malare Malare |
---|
மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்
காதலர் உன்னை
காண வந்தால் நிலையை
சொல்வாயோ என் கதையை
சொல்வாயோ
மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்
காட்சிகள் மாறும்
நாடகம் போலே காலமும்
மாறாதோ காலமும்
மாறாதோ
காலங்களாலே
வாழ்க்கை செல்லும்
பாதையும் மாறாதோ
பாதையும் மாறாதோ
யார் மாறிய
போதும் பாவை எந்தன்
இதயம் மாறாது என்
நிலையும் மாறாது
மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்
கண்களில்
தோன்றும் காட்சியில்
ஒன்றாய் கலந்தே நின்றாரே
கலந்தே நின்றாரே
நினைவுகள்
தோன்றும் நெஞ்சில்
என்றும்
நிறைந்தே நின்றாரே
இனி அவருடன்
வாழ்வில் ஒன்று சேரும்
திருநாள் வாராதோ என்
மண நாள் வாராதோ
மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்