Malare Pesu |
---|
ஆஹா ஆஆஆஆஆ
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு
மௌன மொழி
மலரே
வாசனை பூக்கள்
வாய் வெடிக்க ஆயிரம்
ஈக்கள் தேன் குடிக்க
நானொரு பூவோ
நீ பறிக்க நால்வகை குணமும்
நான் மறக்க
மெதுவாய் குலுங்கும்
மாங்கனியே கிடைத்தால்
விடுமோ ஆண் கிளியே
மடிமேல் கொடி
போல் விழுந்தேனே
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு
மௌன மொழி
மலரே
ஏந்திய வீணை
நானிருக்க ஏழிசை மீட்ட
நீ இருக்க
ராத்திரி நேர ராகமிது
பூவோடு காற்று பாடுவது
இதழால் இனி
மேல் நீ எழுதும் கதைதான்
படித்தேன் நாள் முழுதும்
படித்தால் எனக்கும்
இனிக்காதோ
மலரே பேசு
மௌன மொழி
மனம் தான்
ஓடும் ஆசை வழி
வாசலை தேடி
ஓடி வந்தேன்
வாலிப ராகம்
பாடி வந்தேன்
மலரே பேசு
மௌன மொழி
ஆண் & மலரே