Malligai Poo Azhagil |
---|
மல்லிகை பூவழகில்
பாடும் இளம் பறவைகளில்
நானும் உன்னை தேடி வந்தேன்
பூங்குயிலே பூங்குயிலே
ஆசை மணி ஓசையில்
பூக்கும் நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன்
பார்வையிலே பார்வையிலே
மல்லிகைப்பூ அழகில்
தேவி பாதையாவும்
திருக்கோயிலாக மாறும்
பார்வை ஏற்றும் தீபம்
உந்தன் வார்த்தை வேதமாகும்
கண்கள் எழுதும் நாளும்
புது காதல் ஓவியம்
பெண்ணின் மௌனம் கூசும்
அதில் வண்ணம் ஆயிரம்
கொஞ்சும் மணிச்சந்தம்
அது உந்தன் மொழியே
எந்தன் மனசிற்பம் என
கொண்டேன் உன்னையே
தவித்திடும் தனிமையில்
குளித்திடும் மழையினிலே
ஆசை மணி ஓசையில்
பூக்கும் நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன்
பார்வையிலே பார்வையிலே
மல்லிகைப்பூ அழகில்
உந்தன் அழகை பேசும் தென்றல்
பூவின் வாசம் வீசும்
மூங்கில் தோளில் சாயும்
தென்றல் ராகமாய் வாழும்
கலையும் கூந்தல் கோலம்
சொல்லும் மோகப்பூங்கதை
ஆசை சிறகை தேடும்
ஒரு காதல் தேவதை
சொந்தம் இது சொர்கம்
என வந்தது அருகே
சிந்தும் மகரந்தம்
இனி எந்தன் வழியே
நனைந்திடும் தளிர்களை
அணைத்திடும் புது ஒளியே
ஆசை மணி ஓசையில்
பூக்கும் நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன்
பார்வையிலே பார்வையிலே
மல்லிகை பூவழகில் பாடும்
இளம் பறவைகளில்
நானும் உன்னை தேடி வந்தேன்
பூங்குயிலே பூங்குயிலே
ஆசை மணி ஓசையிலே