Manithaneyam

Manithaneyam Song Lyrics In English


மனிதநேயம் மனிதநேயம் மயங்கி போனதெங்கே மிருகம் கூடி இழுக்கும் தேரில் இறைவன் போவதெங்கே மடல்கள் யாவும் எரியும்போது தேன் எடுப்பது எங்கே அறங்கள் யாவும் கதறும்போது யார் சிரிப்பது அங்கே

ஞாயாயத்தி ஞாயமாறே விடியாதோ ஞாயமாறே

மனிதநேயம் மனிதநேயம் மயங்கி போனதெங்கே மிருகம் கூடி இழுக்கும் தேரில் இறைவன் போவதெங்கே

ஞாயாயத்தி ஞாயமாறே விடியாதோ ஞாயமாறே

ஏழையாய் பிறந்து விட்டால் எழவு பாடு தான் ஊமையாய் அழுகிறதே ஒரும பாடு தான்

ஞாயாயத்தி ஞாயமாறே விடியாதோ ஞாயமாறே

யாரை கேள்வி கேட்க்க அட யார தேடி பார்க்க சாதி போதை ஏறி அட நீதி தேவன் தூங்க

ஈனம் தாண்டி போக அவமான மீறி போக ஏழை எங்கு போக அவன் காலில் கல்லும் நோக


அறம் எல்லாம் தெருவிலே அகதியாய் திரியுதே முரண்களே அறங்கலாய் மனமெல்லாம் நிறையுதே யார் சாதி உயர்ந்ததென்றே மாநாடு நடக்குதிங்கே தனி மனிதனின் அழுகுரலோ காற்றில் தீர்ந்து விடுதே

ஞாயாயத்தி ஞாயமாறே விடியாதோ ஞாயமாறே

ஆசி வழங்கும் சாமி முன்னேத்த வழிய காமி சாதிக்குள்ள சாதி வெறும் வாயில் தானே நீதி

வர்க்க பேதம் பாதி அட வருண பேதம் பாதி அக்கபோரை மீறி இனி கேட்பதெந்த சேதி

உயிரெல்லாம் இறந்து தான் ஒரு வழி கிடைக்குமா ஏழையை மறுத்து தான் சமத்துவம் இருக்குமா போராடி சலிக்கிறதே ஊர் கூடி அழுகிறதே கணம் பொருந்திய ஜனநாயகம் உறக்கம் நீங்கி எழுமா

ஞாயாயத்தி ஞாயமாறே விடியாதோ ஞாயமாறே

ஞாயாயத்தி ஞாயமாறே விடியாதோ ஞாயமாறே