Mannavan Vandhaanadi

Mannavan Vandhaanadi Song Lyrics In English


கலை மகள் துணை கொண்டு
கலை வென்று புகழ் கொண்ட
காவலன் வாழ்க வாழ்க

மலை மகள் வரம் கொண்டு
மலை போன்ற பலம் கொண்ட
மன்னவன் வாழ்க வாழ்க

திருமகள் அருள் கொண்டு
பொருள் கொண்ட
திருவருட்செல்வரே வாழ்க வாழ்க

இயல் இசை நாடகம்
முத்தமிழ் காக்கின்ற
தலைவனே வாழ்க வாழ்க

குடி மக்கள் மனம் போல
முடியாட்சி காண்கின்ற
கொற்றவா வாழ்க வாழ்க

நின் கொடி வாழ்க படை வாழ்க
குடி வாழ்க குலம் வாழ்க
நலமும் பல்லாண்டு வாழ்க

மன்னவன் வந்தானடி தோழி

மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி

மாயவனோ தூயவனோ
நாயகனோ நான் அறியேன்
மாயவனோ தூயவனோ
நாயகனோ நான் அறியேன்
மன்னவன் வந்தானடி தோழி

செந்தமிழ்ச் சொல்லெடுத்து
இசை தொடுப்பேன்
வண்ண சந்தத்திலே
கவிதைச் சரம் கொடுப்பேன்

மூன்று தமிழ் மாலை
சூட்டிடுவேன்
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்
இனி முப்பொழுதும் கற்பனையில்
அற்புதமாய் வாழ்ந்திருக்கும்

மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி

தூவிய பூவினில் மேனிகள் ஆடிட
நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்
மன்னவன் வந்தானடி

தத்தித் தாங்கிட தக தரிகிடதோம்
தித் தாங்கிட தக தரிகிடதோம்
தகதித் தாங்கிட தக தரிகிடதோம்
தித் தாங்கிட தக தரிகிடதோம்
தக தரிகிடதோம் தக தரிகிடதோம்
தக தரிகிடதோம் தக தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா

ஸா ரீ கா மா பா தா நீ
ஸரிகம பதநீ சுரமோடு ஜதியொடு
நாத கீத ராக பாவம் தான் பெறவே
மன்னவன் வந்தானடி

தக்க தின்னம் தரித
தகஜனுத துக்கு தரித
துக்கு தகிட தத்திங்கு
தக ஜனக்கு தத்தீம்
தத் தகிட கிடதக தரிகிட தோம்
தக தகிட கிடதக தரிகிட தோம்
தா கிட தத்தோம்
கிட தத்தோம் கிட தத்தோம் தத் தா

காதற்க் கவிதை கடலெனப் பெருகிட
மாதர் மனமும் மயிலென நடமிடவே
மன்னவன் வந்தானடி

ததரி ததன
தஜணு தஜணு ஜணு தஜுணு தத்திமி
ஜுணு தகதிமி தரிகிட
தித் தாங்கிட தக தரிகிட தகதா
ஜுணு தாங்கிட தக தரிகிட தகதா
தகதித் தாங்கிட தக தரிகிட தகதா தத் தா

திருமலர் மணமுற
குறுநகை நலம் பெற
மலர் விழி சிவந்திட
கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி


திரிகிட தரிகிட தரிகிட திரிகிட
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட
திரிகிட தரிகிட தத் தா

தித்தித்தால் அது செம்பொற்க் கிண்ணம்
தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்

ததின்ன தங்க ததின்ன தங்க
ததின்ன தாங்கிட தரிகிட
ததின்ன தங்க ததின்ன தாங்கிட
தக தரிகிட தகதா

சித்தத்தால் ஒரு காதற்ச் சின்னம்
தத்தித் தாவிய பாவையின் முன்னம்
என் மன்னவன்

தத்தித்தா கிடதக தரிகிட தோம்
தித்தா கிடதக தரிகிட தோம்
தா கிடதக தரிகிட தோம்
கிடதக தரிகிட தோம்
தாங்கிட தோம் தத்திம்
தகத தகஜம் தகிட தகஜுணு தகிட தத்தா

விரைவினில் நீ நீ
மண மலர் தா தா
திருமாற்ப் பா பா
தாமதமா மா
மயில் எனைப் பார் கா

விரைவினில் நீ மண மலர் தா
திருமாற்ப் பா தாமதமா
மயில் எனைப் பார்
நீ தா பா மா கா நீதாபாமகா நிதபமக
ஸா சதமது தரவா

தரிகிட ஜம் தீங்கிட தாங்கிட தக
தரிகிட தகதா

ரீ ரிகமப தனிஸா

தஜ்ஜம் தஜ்ஜம் தஜம் தரிகிட தா

கா கருனையின் தலைவா

தாங்கிட தத்தீம்
கிடதத்தீம் கிடதத்தீம் ததா

மா மதி மிகு முதல்வா

தரிகிட தோம் த தரிகிட
தோம் த தரிகிட தா

பா பரம் பொருள் இறைவா
தா தனிமையில் வரவா
நீ இறையருள் பெறவா
ஆளும் புவி ஏழும்
கடல் ஏழும் நடமாடும் படி வாராய்
அருள் தாராய்

தரிகிட திம் திரிகிடதா

ஆளும் புவி ஏழும்
கடல் ஏழும் நடமாடும்
படி வாராய் தாராய்
அனுதினம் உனை வழிபடும் வளம்
இனி ஒரு தலைவனை பணிவதில்லை
மன்னவன் வந்தானடி

தகதித் தாங்கிட தக தரிகிட தக
ததித் தாங்கிட தக தரிகிட தக
தரிகிட தோம் தரிகிட தோம்
தரிகிட தோம் தரிகிட தோம் தா