Maragadha Kutti |
---|
மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே
பெண் மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே
முல்லைப் பூ தானா
மூன்றாம் பிறை தானா
உன் தாமரைப் பாதம் நாலடி வைத்தால்
வாங்குதே மூச்சு அட என்ன ஆச்சு
பெண் மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே
வானவில்லில் தூளி கட்டித் தருவேனே
தேவதையை ஆட்டி விடச் சொல்வேனே
பெண் ஆ ஆ ஆ ஆ
வெண்ணிலவில் கிண்ணம் ஒன்று செய்வேனே
சூரியனை ஊட்டி விடச் சொல்வேனே
வீரர்களின் கதை சொல்லி வளர்த்தால்
வெற்றிகளை கொண்டு வந்து குவிப்பான்
எவ்வுயிர்க்கும் அன்பு செய்து இருந்தால்
உந்தன் பிள்ளை ஆயுதத்தை மண்ணில் தூக்கி எறிவான்
ஆண் மணக்குதடி மழலையின் பூ வாசம்
பெண் இனிக்குதடி மனசுக்குள் தாய்ப் பாசம்
ஆண் குதிக்குதா
பெண் குதிக்குதா வயிற்றில் சந்தோஷம்
மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே
முல்லைப் பூ தானா மூன்றாம் பிறை தானா
உன் தாமரைப் பாதம் நாலடி வைத்தால்
வாங்குதே மூச்சு அட என்ன ஆச்சு
ஆண் மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பெண் பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே
செம்பருத்திப் பூவுக்கின்று திருநாளோ
சேர்த்து வைத்த தேனை அள்ளித் தருவாளோ
பெண் ஆ ஆ ஆ ஆ
சீமந்தத்தில் சீர் வரிசை பெறுவாளோ
சீமைக்கெல்லாம் கை வளையல் தருவாளோ
பொத்திப் பொத்தி நடக்கணும் மயிலே
பிள்ளை ஒன்று கொடுக்கணும் குயிலே
கட்டில் விட்டு ஒதுங்கணும் தனியே
ஆடப் போகும் தொட்டில் பக்கம் உறங்கணும் இனியே
பெண் வளருதடி உந்தன் உயிரோடு
கண்மணிக்கு அழகிய பேர் தேடு
படிச்சுக்கோ படிச்சுக்கோ புதுப் புது தாலாட்டு
மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே
முல்லைப் பூ தானா மூன்றாம் பிறை தானா
உன் தாமரைப் பாதம் நாலடி வைத்தால்
வாங்குதே மூச்சு அட என்ன ஆச்சு
மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே