Maratha Vachavan |
---|
மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஏ மனமே
கலங்காதே வீணாக
வருந்தாதே பாரங்கள்
எல்லாமே படைத்தவன்
எவனோ அவனே சுமப்பான்
ஓம் சாந்தி ஓம் (4)
மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
{ படைத்தவனின்
துணையிருக்க அடுத்தவனின்
துணை எதற்கு இதயத்திலே
துணிவிருக்க வருத்தமிங்கே
உனக்கெதற்கு } (2)
உன்னை நல்ல
ஆளாக்க உத்தமனை
போலாக்க எண்ணியவன்
யாரென்று கண்டுக்கொள்ள
யாருண்டு ஊரெல்லாம்
உந்தன் பேரை போற்றும்
நாள் வரும்
ஓம் சாந்தி ஓம் (4)
மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
{ உதவியின்றி
தவிப்பவர்க்கு உதவிடவே
நீ படிப்பாய் உணவு இன்றி
துடிப்பவர்க்கு உணவுதர
நீ படிப்பாய் } (2)
புத்தியுள்ள
உனக்கெல்லாம் புத்தகத்து
படிப்பென்ன சக்தியுள்ள
உனக்கெல்லாம் சத்தியத்தில்
தவிப்பென்ன காத்து இருப்பது
எத்தனை பேரோ உன்னிடம்
தோற்பதற்கு
ஓம் சாந்தி ஓம் (4)
மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஏ மனமே
கலங்காதே வீணாக
வருந்தாதே பாரங்கள்
எல்லாமே படைத்தவன்
எவனோ அவனே சுமப்பான்
ஓம் சாந்தி ஓம் (4)