Masaru Ponnae Varuga

Masaru Ponnae Varuga Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

மாசறு பொன்னே வருக
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக

பெண் : கோல முகமும்
குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும்
விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத்
தமிழ் மறை தொழும்

பெண் : மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக

பெண் : நீர் வானம் நிலம் காற்று
நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப்
பணியாற்றுதே

பெண் : பார் போற்றும் தேவாரம்
ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே
உன் பதம் போற்றுதே


திரிசூலம் கரம் ஏந்தும்
மாகாளி உமையே
கருமாரி மகமாயி
காப்பாற்று எனையே

பெண் : பாவம் விலகும் வினையகலும்
உனைத் துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும்
சூலியென ஆதியென
அடியவர் தொழும்

பெண் : மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக

பெண் : கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும்
விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத்
தமிழ் மறை தொழும்

பெண் : மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக