Mathalam Kotta

Mathalam Kotta Song Lyrics In English


நாளு திருநாளு
அங்கு நிக்கிறா நம்மாளு
கேளு தெம்மாங்கு
இதக் காதுல நீ வாங்கு
புன்னக சிந்துது பொங்குதே பாலாறு

மத்தாளம் கொட்டப் போறேன்
ஒரு மைனாவ கட்டப் போறேன்
குத்தாலம் போகப் போறேன்
அங்கு கும்மாளம் போடப் போறேன்
தொட்டால் ஓடும் பட்டாம்பூச்சி
கண்ணால் பேசாம பேசும்
நேரம்தானே மானே

மத்தாளம் கொட்டப் போறான்
ஒரு மைனாவ கட்டப் போறான்

சலங்க ஒரு சோடிதான்
அது குலுங்கும் இசை பாடித்தான்
புரியும் அதன் ஓசைதான்
அதில் தெரியும் ஒரு ஆசைதான்

நான் ஆடும் போது
நீ ஆட வேணும்
ஆட்டம் பாட்டம் ஊர் பாக்கணும்
நான் ஆடும் போது
நீ ஆட வேணும்
ஆட்டம் பாட்டம் ஊர் பாக்கணும்

தெம்மாங்கு ராசா
துள்ளாதே லேசா

என்னடி ஆத்தா
நாலு பேர் பாத்தா
என்னடி கண்ணடி படுமா

அட மத்தாளம் கொட்டப் போறான்
ஒரு மைனாவ கட்டப் போறான்
குத்தாலம் போகப் போறான்
அங்கு கும்மாளம் போடப் போறான்


பறக்கும் புது தாவணி
அது படிக்கும் ஒரு லாவணி
குதிக்கும் மணித் தேரு நீ
ஒலை கொதிக்கும் புதுச்சோறு நீ

சோறாக்கியாச்சு வேறென்ன பேச்சு
சொகுசா சொகமா பரிமாறணும்
சோறாக்கியாச்சு வேறென்ன பேச்சு
சொகுசா சொகமா பரிமாறணும்

அச்சச்சோ பாவம்
ரொம்பத்தான் வேகம்

அச்சச்சோ பாவம்
ரொம்பத்தான் வேகம்
அச்சம்தான் வெக்கம்தான் விடுமா

அட மத்தாளம் கொட்டப் போறேன்
ஒரு மைனாவ கட்டப் போறேன்
குத்தாலம் போகப் போறேன்
அங்கு கும்மாளம் போடப் போறேன்
தொட்டால் ஓடும் பட்டாம்பூச்சி
கண்ணால் பேசாம பேசும்
நேரம்தானே மானே

மத்தாளம் கொட்டப் போறேன்
ஒரு மைனாவ கட்டப் போறேன்
குத்தாலம் போகப் போறான்
அங்கு கும்மாளம் போடப் போறான்