Mutham Mutham Senthen

Mutham Mutham Senthen Song Lyrics In English


முத்தம் முத்தம் செந்தேனல்லவோ
நித்தம் நித்தம் தந்தேனல்லவோ

கண்ணா கண்ணா உன் வேகமென்ன
கன்னம் கன்னம் புண்ணானதென்ன
இன்னும் தந்தால் பெண் என்னாவதோ

முத்தம் முத்தம்

இதயத்திலே ஒரு கதவிருக்கும்
இரவு பகல் அது திறந்திருக்கும்

விழிகளிலே ஒரு வழி இருக்கும்
வாவெனவே மனம் அழைத்திருக்கும்

இதழ் சுவையோ இல்லை மது சுவையோ
ஹோ ஊ ஹோ ஊ ஹோ ஓஒ ஓஒ
இதழ் சுவையோ இல்லை மது சுவையோ
பிடி இடையோ இல்லை மலர்க்கொடியோ
குறுநகையோ அது சிறுகதையோ
குறுநகையோ அது சிறுகதையோ
காலமெல்லாம் வரும் தொடர்கதையோ


முதல் முதலாய் என்ன அறிமுகமோ
ஹோ ஊ ஹோ ஒ ஓஓ
முதல் முதலாய் என்ன அறிமுகமோ
கலைகளிலே நல்ல அனுபவமோ
ரசிப்பதிலே இது புதுவிதமோ
ரகசியமாய் தொட சுகம் வருமோ

முத்தம் முத்தம் செந்தேனல்லவோ
நித்தம் நித்தம் தந்தேனல்லவோ

கண்ணா கண்ணா உன் வேகமென்ன
கன்னம் கன்னம் புண்ணானதென்ன
இன்னும் தந்தால் பெண் என்னாவதோ

லல லல லலால லா
லல லல லலால லா