Naan Yaar |
---|
அடைபடும் கதவுக்குள்
உடைபடும் உயிர்
விடுகின்ற பொழுதிலும்
பொசுங்கிடும் உயிர்
பறந்திடும் பறவையும்
துரத்திடும் உயிர்
பூத்திடும் நிலத்திலும்
நசுங்கிடும் உயிர்
பெய்கின்ற மழையிலும்
எரிந்திடும் உயிர்
சிரிக்கின்ற மனிதரும்
வெறுத்திடும் உயிர்
பார்க்கின்ற கடவுளும்
மறந்திடும் உயிர்
வருகின்ற சாவையும்
பொறுத்திடும் உயிர்
நான் யார்
நான் யார்
நீ ஒழி
நான் யார்
நீ மழை
நான் யார்
நான் யார்
நான் யார்
நான் யார்
நான் யார்
ரயில் தேடி
வந்து கொள்ளும்
நான் யார்
பூக்கும் மரமெங்கும்
தூக்கில் தொங்கும்
நான் யார்
நதியில் செத்த
மீனாய் மிதக்கும்
நான் யார்
குடுசைக்குள் கதறி எரிந்த
நான் யார்
தேர் ஏறாத சாமியிங்கு
நான் யார்
உன் கை படாமல்
தண்ணீர் பருகும்
நான் யார்
ஊர் சுவர்க்கட்டி தூரம் வைக்க
நான் யார்
மலக்குழிக்குள் மூச்சையடக்கும்
நான் யார்
நான் யார்
நான் யார்
அரசன் என்று
சொல்வோருமுண்டு
அடிமை என்று
நினைப்போருமுண்டு
ஏர் பிடித்த வாழ்வும் உண்டு
போர் செய்த கதையும் உண்டு
மரித்தபின் உடல் எங்கும்
நீலம் பரவும்
நான் யார்
புதைத்தபின் நீல
கடலில் நீந்தும்
நான் யார்
நான்யார்
மரித்தபின் உடல் எங்கும்
நீலம் பரவும்
நான் யார்
புதைத்தபின் நீல கடலில் நீந்தும்
நான் யார்