Nalla Paerodu |
---|
நல்ல பேரோடு
புகழ் பெற்ற பெருமை
வீரப் பெண்ணாக
அவள் வாழ்ந்த மகிமை
இன்று நினைத்தாலும்
அழியாத புதுமை
அவள் நிலையான வரலாற்றுப் பெண்மை
நல்ல பேரோடு
புகழ் பெற்ற பெருமை
வீரப் பெண்ணாக
அவள் வாழ்ந்த மகிமை
இன்று நினைத்தாலும்
அழியாத புதுமை
அவள் நிலையான வரலாற்றுப் பெண்மை
அந்த ஜான்சி ராணி
பெரும் சேனைக் கொண்டாள்
போரில் தானே சென்றாள்
படை தன்னை வென்றாள்
வெட்டும் வாளோடு விளையாடலாம்
வேலும் வில்லேந்தி நடமாடலாம்
தர்மம் பெண்ணுக்குப் போரல்லவா
தாய்மைப் பண்பாடு அதுவல்லவோ
அந்த வாசுகி போல் கொண்ட நாயகனைத்
அந்த வாசுகி போல் கொண்ட நாயகனைத்
தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே
தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே
நல்ல பேரோடு
புகழ் பெற்ற பெருமை
வீரப் பெண்ணாக
அவள் வாழ்ந்த மகிமை
இன்று நினைத்தாலும்
அழியாத புதுமை
அவள் நிலையான வரலாற்றுப் பெண்மை
பெண்மை விளையாடும் பொம்மை அல்ல
பிள்ளை பெறுகின்ற சிலையும் அல்ல
நம் அன்னை இதுபோல
நினைத்தாளில்லை
அந்தப் பண்பாடு நமக்கேன் இல்லை
அன்று ஜான்சியிலே
வந்த ராணியைப் போல
அன்று ஜான்சியிலே
வந்த ராணியைப் போல
புகழ் காணாத பெண்ணென்றும் பெண்ணல்லவே
தொட்டில் தாலாட்டு புகழில்லையோ
தோளில் பூமாலை புகழில்லையோ
தலையில் பெண்ணுக்கு மலரில்லையோ
அவள் தானும் பேர் வாங்க மனமில்லையோ
நானும் பேர் வாங்க மனமில்லையோ
அந்த வாசுகி போல் கொண்ட நாயகனைத்
தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே
தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே
நல்ல பேரோடு
புகழ் பெற்ற பெருமை
வீரப் பெண்ணாக
அவள் வாழ்ந்த மகிமை
இன்று நினைத்தாலும்
அழியாத புதுமை
அவள் நிலையான வரலாற்றுப் பெண்மை