Nalla Vaazhu Kaanalaame |
---|
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
கல்வியினால் உள்ளத்திலே
களங்கமெல்லாம் தீரும்
ஆஅஆஆஅஆஅ
கல்வியினால் உள்ளத்திலே
களங்கமெல்லாம் தீரும்
நம் களங்கமெல்லாம் தீரும்
கழுவி மெழுகும் இல்லத்திலே
அழகும் வளமும் சேரும் அந்த
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
குடிசை என்றாலும் தினமே
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
பெண் ஆஅஆஅஆஆஅஆஅ
ஆண் ஆஹாஹா
பெண் ஆஅஆஅஆஆஅஆஅ
ஆண் ஆஹாஹா
குடிசை என்றாலும் தினமே
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
கூட்டிப் பெருக்கி எடுப்போம்
ஆண் கூழ் இருந்தாலும்
உடல் குளித்த பின்னே குடிப்போம்
கந்தை என்றாலும் அதை
கசக்கித் தோய்த்து உடுப்போம்
கந்தை என்றாலும் அதை
கசக்கித் தோய்த்து உடுப்போம்
சொந்த வாழ்வை சரி செய்தால்
சொர்க்க வாழ்வு சேரும்
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
நாட்டு மக்கள் ஒற்றுமையின்
கூட்டுறவோடும்
ஆண் நம் கூட்டுறவோடும்
நஞ்சைப் பயிர் செய்வதனால்
பஞ்சமும் ஓடும்
ஆண் நம் பஞ்சமும் ஓடும்
பாடுபட்டாலே
பெண் ஆஆஅஆஅஆஆஅஆ
பாடுபட்டாலே நமது
நாடு முன்னேறும்
பாடுபட்டாலே நமது
நாடு முன்னேறும்
வாழ்வின் மேடு பள்ளம் சரியானால்
வாடும் நெஞ்சம் ஏது அந்த
நல்ல வாழ்வு காணலாமே
நாட்டில் நல்ல வாழ்வு காணலாமே
நாமே நல்ல வாழ்வு காணலாமே
நல்ல வாழ்வு காணலாமே