Nilave Vaa Selathe Vaa

Nilave Vaa Selathe Vaa Song Lyrics In English


ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

நிலாவே வா
செல்லாதே வா எந்நாளும்
உன் பொன் வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா
செல்லாதே வா

காவேரியா கானல்
நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லை பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீ தான் இன்னும்
சிறு பிள்ளை தாங்காதம்மா
நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில்
வைத்தாய் முள்ளை

நிலாவே வா
செல்லாதே வா


பூஞ்சோலையில்
வாடை காற்றும் வாட
சந்தம் பாட கூடாதென்று
கூறும் பூவும் ஏது மண்ணின்
மீது ஒரே ஒரு பார்வை தந்தால்
என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை
சொன்னால் என்ன மானே
ஆகாயம் தாங்காத மேகம்
ஏது கண்ணே

நிலாவே வா
செல்லாதே வா எந்நாளும்
உன் பொன் வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா
செல்லாதே வா எந்நாளும்
உன் பொன் வானம் நான்