Oru Muttharathil

Oru Muttharathil Song Lyrics In English


ஹாஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஆஅஆஅ

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல்
என் நெஞ்சம் அதன் மஞ்சம்

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்

அந்த மாலை இந்தப்
பெண்ணின் சொந்தமானதே
அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே
அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே
அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே
பொன்னரங்கம் தன்னில் வந்து
என்னை மட்டும் பாடச் சொன்னதென்ன

கன்னரங்கம் மின்ன மின்ன
காதல் கொண்டதோ
அந்தரங்கம் கண்டு கொள்ள அழைப்பு வந்ததோ
அந்தக் கிண்ணம் சொந்தம் இல்லை
என்று இன்று கண்டு கொண்டதென்ன


ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்

நீல வானம் மெல்ல மெல்ல
சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே
நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே
பாடல் ஒன்று ராகம் ஒன்று
தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன

காலம் என்னும் தேவன் என்னை
கேலி செய்கிறான்
கோலம் வேறு கொள்கை வேறு
காண சொல்கிறான்
இன்று மட்டும் நாளை இல்லை
என்ற சொல்லில் உண்மை இனி இல்லை

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல்
என் நெஞ்சம் அதன் மஞ்சம்