Pakkathula Nee Irundhum

Pakkathula Nee Irundhum Song Lyrics In English


பக்கத்துல நீ இருந்தும்
தூரமுன்னு நான் இருந்தேன்
சின்னஞ்சிறு கிளியே
கையில் உள்ள வைரம் தன்ன
கண்டு கொள்ள நான் மறந்தேன்
சின்னஞ்சிறு கிளியே
பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள
கதை இருக்கு நீ கேளு
சொல்லாம ஆறாது

பக்கத்துல நீ இருந்தும்
தூரமுன்னு நான் இருந்தேன்
சின்னஞ்சிறு கிளியே

பார்வையிலே குத்தமுன்னா
பார்ப்பதெல்லாம் குத்தமடி
சின்னஞ்சிறு கிளியே
உள்ள படி சொல்லப் போனா
உண்மைக்குத்தான் காலம் இன்று
சின்னஞ்சிறு கிளியே
பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள
கதை இருக்கு நீ கேளு
சொல்லாம ஆறாது

பார்வையிலே குத்தமுன்னா
பார்ப்பதெல்லாம் குத்தமடி
சின்னஞ்சிறு கிளியே

கண்ணு தெறந்திருந்தது
மனசு மட்டும் ஏனோ அடச்சிருந்தது
அழுவதா சிரிப்பதா அம்மாடி

நானா விரும்பவில்லையே
நடந்ததையும் ஏனோ தடுக்கவில்லையே
நடப்பதே நடக்குமே அம்மாடி

பூந்தென்றலே
தேவை இல்லா வேலிகள் உண்டாக
யார் காரணம்
பூ முல்லையே
மிச்சத்தைக் காலங்கள்தான் கூறணும்

நான் நடக்கும் பாதையில் யார் நடப்பா
ஊர் பாரம் என் மீது
என் வீட்டு பாரத்தை யார் சுமப்பா

பார்வையிலே குத்தமுன்னா
பார்ப்பதெல்லாம் குத்தமடி
சின்னஞ்சிறு கிளியே


முன்னால் விழுந்த முடிச்சு
அவிழ்த்த கிளி எங்கோ பறந்து சென்றது
கெடச்சது நீயடி பூங்கிளியே

தன்னால் விழுந்த முடிச்சு
என்னை எடுத்து இங்கே எணச்சு வெச்சது
இருப்பதே நீயடி பூங்கிளியே

வாழ்க்கை தரும்
வாழ்க்கை தரும் பாடங்கள்
வேறெங்கும் கிடைக்காதம்மா
விட்டு விட்டால்
போகின்ற நேரங்கள் திரும்பாதம்மா

கண்டெடுத்த முத்தான முத்து மணி
நான் இன்று வேறல்ல
என் வார்த்தை பொய் அல்ல நீ அறிவாய்

பக்கத்துல நீ இருந்தும்
தூரமுன்னு நான் இருந்தேன்
சின்னஞ்சிறு கிளியே

உள்ள படி சொல்லப் போனா
உண்மைக்குத் தான் காலம் இன்று
சின்னஞ்சிறு கிளியே

பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள
கதை இருக்கு நீ கேளு
சொல்லாம ஆறாது

சொல்ல வந்த சேதிகள
சொல்ல வந்த நேரம் இது
சின்னஞ்சிறு கிளியே
உள்ள படி சொல்லப் போனா
உண்மைக்குத் தான் காலம் இன்று
சின்னஞ்சிறு கிளியே