Poi Vaa Magale

Poi Vaa Magale Song Lyrics In English


போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா

தாய் வீடென்பதும் தன் வீடே
தந்தையின் நாடும் நம் நாடே
சேயும் சேயும் வரக் கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா

ஒரு நாள் கோபம் ஒரு நாளே
அதில் உத்தமர் கோபம் வளராதே
மணநாள் மன்னன் உனைக் கண்டு
மதி மயங்குகிறானே தளராதே


போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா

காதலன் சேனை நின்றிருக்கும்
தந்தை கண்களும் உன்னை கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசைக் கேட்கும்
அன்பு பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்

போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா