Poradinom

Poradinom Song Lyrics In English


லல லாலா லல லாலா
லாலா லல லாலா லாலா லல லாலா
லலலாலா லல லாலா லலலாலா லல லாலா

போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா
போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா

நாளைகளே எப்போதும் உன் கையிலே
காசில்லையே இப்போது உன் பையிலே

போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா

சாலைகளின் ஓரம் ஏழை சனம் வாழும்
கண்ணெடுத்து பாரும் காலம் என்றும் மாறும்
சாலைகளின் ஓரம் ஏழை சனம் வாழும்
கண்ணெடுத்து பாரும் காலம் என்றும் மாறும்

நாணயத்தில் ஒட்டையின்னு
மாத்தி வச்சு பார்த்தோம்
ரெண்டு பக்கம் ஓட்டையின்னு
அப்புறம்தான் பார்த்தோம்

கங்கை நதி இங்குமுண்டு
கண்ட இடம் தங்கமுண்டு
இன்னும் இங்கு பஞ்சமுண்டு ஏனப்பா

போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா

நாளைகளே எப்போதும் உன் கையிலே
காசில்லையே இப்போது உன் பையிலே


போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா



மந்திரிக்கு தந்தி தந்திருக்கோம் முந்தி
காத்திருந்தோம் நம்பி ஆகவில்லை தம்பி
மந்திரிக்கு தந்தி தந்திருக்கோம் முந்தி
காத்திருந்தோம் நம்பி ஆகவில்லை தம்பி

தேர்தலுக்கு வந்தவக
திரும்பி வர காணோம்
இன்னும் இந்த மக்களுக்கு
ஏன் வரல ஞானம்

வாங்கினவன் பந்தியில
தந்தவனோ சந்தியில
இன்னும் இங்கே கேள்வி இல்லே ஏனப்பா

போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா

நாளைகளே எப்போதும் உன் கையிலே
காசில்லையே இப்போது உன் பையிலே ஹேய்

போராடினோம் எந்தன் தோழா
இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா