Pudhumai Pengal

Pudhumai Pengal Song Lyrics In English


புரட்சி கவிஞர் கவிதை நடையே
பொங்கி பெருகும் கங்கை நதியே
பெண்ணின் பெருமை பேசும் அழகே
புதுமை பெண்ணே வருக வருக

ஆ ஹா ஹா ஹா
ஆ ஹா ஹா ஹா
ஆஆஆஅஆ

புதுமை பெண்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்

புதுமை பெண்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்
அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம்
அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம்

அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம்
அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம்

அச்சம் என்றும் நாணம் என்றும்
அடக்கி வைத்தார்கள்
ஆண்கள் நம்மை ஆள திட்டம்
தீட்டி வைத்தார்கள்

தீமை தன்னை எண்ணும் போது
அச்சம் கொள்ளுங்கள்
பாவம் வந்து சேரும் போது
வெட்கம் கொள்ளுங்கள்

புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி
இதை பண் பாடி சொன்னான் பாரதி

புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி
இதை பண் பாடி சொன்னான் பாரதி


காசுக்காக மாலை சூட்டும்
இழிந்த உள்ளங்கள்
கண்ணில் பட்டால் அச்சமின்றி
விலங்கு பூட்டுங்கள்

காலம் பார்த்து தாமே தம்மை
மாற்றிக் கொள்ளட்டும்
காதல் அன்பு தியாகம் எல்லாம்
கற்றுக்கொள்ளட்டும்

இந்த கல்யாண சந்தை நாட்டிலே
என்ன கச்சேரி தேவை வீட்டிலே

இந்த கல்யாண சந்தை நாட்டிலே
என்ன கச்சேரி தேவை வீட்டிலே

வீட்டுக்குள்ளே வாழும் பெண்ணை
அடைத்து வைத்தார்கள்
ஏட்டை தொட்டு பார்ப்பதெல்லாம்
பாவம் என்றார்கள்
நாட்டை இன்று ஆள்வதற்கு
பெண்கள் வந்தார்கள்
நாளை எங்கள் காலம் என்று
சொல்லித் தந்தார்கள்

இனி எல்லோர்க்கும் எல்லாம் ஆகலாம்
இது பூலோக சொர்க்கம் காணலாம்

புதுமை பெண்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்