Pullaikooda Paada Vaitha

Pullaikooda Paada Vaitha Song Lyrics In English

புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஜீவன் தந்தாளே என் வாழ்வில் பூஜை செய்தேனே நெஞ்சோடு

புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

எங்கே சென்றாலும் ஓர் துணையானது ஏனோ எனக்குள்ளே அதன் குரல் கேட்குது அலை நீரில் ஆடும் நிலவைத் தொட மனம் அலைபாயும் என் மீது ஒளியும் பட

தொடர்ந்து வந்த நிழல் அது எனக்கு நல்ல துணை அது தேவாரம் அதை நானும் பாட ஆதாரம் எதுவென்று கூற ஊமை பாடும் பாடல் எனது உண்மை சொன்னது

புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

கேள்வி என்றாலே ஒரு பதில் வேண்டுமே கேட்டாலும் தரவே நல் மனம் வேண்டுமே வீணை என்றாலே ஒரு விரல் மீட்டத்தான் நாதம் வந்தாலே நல் சுகம் கூட்டத்தான்

நெருங்கினேனே நினைவில்தான் நினைப்பில் தானே வாழ்கிறேன் உன் பார்வை பட்டால் வசந்தம் உன் கைகள் தொட்டால் சுகந்தம் ராகம் உனது தாளம் உனது பொழுதும் நீயம்மா