Raman Illadhu

Raman Illadhu Song Lyrics In English


ராமன் இல்லாது ஸ்ரீதேவி போனாள்
காற்றோடு போகின்ற மேகங்கள் ஆனாள்
ராமன் இல்லாது ஸ்ரீதேவி போனாள்
காற்றோடு போகின்ற மேகங்கள் ஆனாள்
இமையே முள்ளாகும் காலங்கள் உண்டு
இமையே முள்ளாகும் காலங்கள் உண்டு
பொய்யல்ல உன் வாழ்க்கை ஆதாரம் இன்று
பொய்யல்ல உன் வாழ்க்கை ஆதாரம் இன்று

ராமன் இல்லாது ஸ்ரீதேவி போனாள்
காற்றோடு போகின்ற மேகங்கள் ஆனாள்

குகனே இப்போது தன் பிள்ளை ஆனான்
தர்மத்தின் தாயோடு பின்னாலே போனான்
குகனே இப்போது தன் பிள்ளை ஆனான்
தர்மத்தின் தாயோடு பின்னாலே போனான்
உலகில் எந்நாளும் சாகாது பாசம்
உலகில் எந்நாளும் சாகாது பாசம்
எங்கேனும் ஓர் நெஞ்சில் மாறாது வாழும்
எங்கேனும் ஓர் நெஞ்சில் மாறாது வாழும்

ராமன் இல்லாது ஸ்ரீதேவி போனாள்
காற்றோடு போகின்ற மேகங்கள் ஆனாள்


காலை நேரத்தில் கீழ்வானம் சிவக்கும்
பொன்மாலை நேரத்தில் மேல் வானம் சிவக்கும்
காலை நேரத்தில் கீழ்வானம் சிவக்கும்
பொன்மாலை நேரத்தில் மேல் வானம் சிவக்கும்
காலம் யார் யாரை எங்கெங்கு சேர்க்கும்
காலம் யார் யாரை எங்கெங்கு சேர்க்கும்
தீர்மானமாய் சொல்ல ஆகாது யார்க்கும்

ராமன் இல்லாது ஸ்ரீதேவி போனாள்
காற்றோடு போகின்ற மேகங்கள் ஆனாள்
இமையே முள்ளாகும் காலங்கள் உண்டு
இமையே முள்ளாகும் காலங்கள் உண்டு
பொய்யல்ல உன் வாழ்க்கை ஆதாரம் இன்று
பொய்யல்ல உன் வாழ்க்கை ஆதாரம் இன்று

ராமன் இல்லாது ஸ்ரீதேவி போனாள்
காற்றோடு போகின்ற மேகங்கள் ஆனாள்