Sakkarai Nilave

Sakkarai Nilave Song Lyrics In English


சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே

மனம் பச்சை தண்ணி
தான் பெண்ணே அதை பற்ற
வைத்தது உன் கண்ணே என்
வாழ்க்கை என்னும் காட்டை
எாித்து குளிா் காய்ந்தாய்
கொடுமை பெண்ணே கவிதை
பாடின கண்கள் காதல் பேசின
கைகள் கடைசியில் எல்லாம்
பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே


காதல் என்ற ஒன்று அது
கடவுள் போல உணரத்தானே
முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை
போல வாயை மூடி அழுமே சொல்ல
வாா்த்தை இல்லை

அன்பே உன் புன்னகை
எல்லாம் அடி நெஞ்சில்
சேமித்தேன் கண்ணே உன்
புன்னகை எல்லாம் கண்ணீராய்
உருகியதேன் வெள்ளை சிாிப்புகள்
உன் தவறா அதில் கொள்ளை
போனது என் தவறா பிாிந்து சென்றது
உன் தவறா நான் புாிந்து கொண்டது
என் தவறா ஆண் கண்ணீா் பருகும்
பெண்ணின் இதயம் சதையல்ல
கல்லின் சுவரா


கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள் கடைசியில்
எல்லாம் பொய்கள் என் பிஞ்சு
நெஞ்சு தாங்குமா

நவம்பா் மாத
மழையில் நான் நனைவேன்
என்றேன் எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய் மொட்டை
மாடி நிலவில் நான் குளிப்பேன்
என்றேன் எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யாா்
என்றால் சுசீலாவின் குரல்
என்றேன் எனக்கும் அந்த
குரலில் ஏதோ மயக்கம்
என நீ சொன்னாய் கண்கள்
மூடிய புத்தா் சிலை என் கனவில்
வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான்
பிடிக்கும் என்றாய் அடி உனக்கும்
உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை
ஏன் பிடிக்காதென்றாய்