Sirippa Konjam Kadan Kodudaa

Sirippa Konjam Kadan Kodudaa Song Lyrics In English

பாடலாசிரியர் : காளிதாசன்

சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகிதா நான் சிரிச்சுபுட்டு திருப்பி தரேன் சிநேகிதா சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகிதா நான் சிரிச்சுபுட்டு திருப்பி தரேன் சிநேகிதா

மனச நினைக்காம உதடு மட்டும் சிரிக்காது வெலைக்கு கிடைக்காது வெளிநாட்டுலையும் கிடைக்காது அண்ணன் தரமாட்டான் பெத்த அப்பன் தரமாட்டான் உன் தம்பி தங்கை மச்சான் மாமன் அத்தை மாமி சொந்த பந்தம் எவனும் தரமாட்டான்

பொறந்தது சிரிக்கத்தானே சிநேகிதா அந்த சிரிப்பில்லாத வாழ்க்கை வேஸ்ட்டு சிநேகிதா

சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகிதா நான் சிரிச்சுபுட்டு திருப்பி தரேன் சிநேகிதா

அட ஒன்னாந் தேதி ஆனா நம்ம மணிபரசுக்கு இருபத்தி ஒன்னாம் தேதி வந்தா நகை கொடுப்பவனுக்கு சிரிப்பு இந்த பொல்லா போன மனித சிரிப்பு குழந்தை சிரிப்பு சிரிப்பு

தவழும் வயசில நான் தாயின் மடியில் மேலிருந்து முத்து முத்தா சிரிச்சேன் பாரு சிநேகிதா நடக்கும் வயசில என் பாட்டியம்மா முதுகு மேல அன்பு உதிர ஏறி சிரிச்சேன் சிநேகிதா

அன்னையிடம் தந்தையிடம் அன்பு சிந்த சிரிச்சேன்டா நண்பர்களின் கூட்டத்திலே நல்லாவே நான் சிரிச்சேன்டா மொத்தமா பொடவைகிட்ட சிரிப்ப அடகு வச்சேன்டா

சிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகிதா நான் சிரிச்சுபுட்டு திருப்பி தரேன் சிநேகிதா

காந்தி சிரிப்பது ரூபாய் நோட்டு மேலதான் இருக்கு நமக்கு அது இல்ல பாரு சிநேகிதா ஏழை சிரிப்புல நம்ம இறைவன் இருப்பது உண்மைதான் ஏழை நாம சிரிப்பது போல் சிநேகிதா

சேவை செய்யும் உழைப்பு அது தேச தாயின் சிரிப்புடா ஜகத்துக்குள் இருக்கு அந்த தெய்வத்தோட சிரிப்புடா நல்லவங்க சிரிபதற்க்கும் காலம் ஒன்னு பொறக்கும்டா