Tamizh Therile |
---|
தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுதே
தலைவர் புகழைக் கொண்டாடுதே
தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுதே
தலைவர் புகழைக் கொண்டாடுதே
குடிசையில் தீபம் ஏற்றிய தேவன்
கொள்கையை வணங்குவோம்
அரிசியின் விலையை ஒரு நிலையாக்கி
ஆண்டதே சாதனை
எடுத்ததும் இல்லை அடைக்கலம் இங்கே
எங்கள் இதயமே அவர் கையிலே
துன்பம் கூட இன்பம் ஆகும் மன்னன் பேச்சிலே
சொந்தம் நூறு நெஞ்சை ஆளும் கண்ணின் வீச்சிலே
தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுதே
தலைவர் புகழைக் கொண்டாடுதே
முழு நிலவானான் முதல்வரும் ஆனான்
தோழனாய் வருகிறான்
தெருவினில் வாழும் எளியவர் நெஞ்சில்
தெய்வமாய் வாழ்கிறான்
மது மணம் இல்லை ஒரு குறை இல்லை
இனி வளங்களே வரும் வாழ்விலே
கண்ணைப் போல எம்மை காத்த மன்னன் வாழ்கவே
காலன் கூட பூவைத் தூவும் அண்ணன் வாழ்கவே
தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுதே
தலைவர் புகழைக் கொண்டாடுதே
இளந் தமிழ்ச் செல்வி தலைவனின் தேரில்
வாரிசாய் வருகிறார்
அரசியில் சோலை அறிவெனும் கங்கை
கரையிலே பூத்ததே
புது முகம் இல்லை புகழ் வெறி இல்லை
அவர் வழியிலே வரும் தலைவியாய்
எண்ணம் போல வாழ்க்கை இங்கே வெல்வார் நாளையே
மன்னன் போல எங்கள் நெஞ்சில் வந்தார் ஆளவே
தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுதே
தலைவர் புகழைக் கொண்டாடுதே
தலைவன் புகழைக் கொண்டாடுதே
தலைவரன் புகழைக் கொண்டாடுதே