Thaayae Vanthaye

Thaayae Vanthaye Song Lyrics In English


தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ
நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ
சின்னஞ்சிறு மழலையாக
இப்போதெந்தன் கையில் வந்தாய்

தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

சின்னச் சின்ன இந்த செல்லக் கிளிக்கொரு
குட்டியம்மா என்று பேரு வைப்பேன்

வண்ண வண்ணச் சின்ன பிஞ்சு கழுத்துக்கு
தங்கச் சங்கிலியைச் சூட்டிடுவேன்

வழி தெரியாமல் வாடிய எனக்கு
விழிகளை திறந்த விடி வெள்ளி நீயே
தத்தி வரும் கிளியே முத்து மணிச் சுடரே
விட்டு விலகாத நெஞ்சின் உயிர் மூச்சே
என்னை ஒரு மனிதனாக்க
ஏனோ எந்தன் கையில் வந்தாய்

தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்


சித்தம் கலங்கிய பித்தன் என்னைத் தேடி
கிட்ட வந்ததென்ன முத்துக் கொடி

சுற்றிச் சுற்றி வந்த பாதையை மாற்றிட
பற்றிப் பிடித்தது பாசக் கொடி

தடம் தெரியாமல் தனி வழி போனேன்
தறி கெட்டு நானும் தனை மறந்திருந்தேன்
சுடரொளியாக என் மனம் நிறைந்தாய்
நிலவொளியாக நிம்மதி தந்தாய்
இனி எந்தன் உலகம் எல்லாம்
நீயே நீயே செல்லக் குட்டி

தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ
நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ
சின்னஞ்சிறு மழலையாக
இப்போதெந்தன் கையில் வந்தாய்

தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்
தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்