Thangachi Sirithalae

Thangachi Sirithalae Song Lyrics In English


தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே

தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே
எதற்காக எனக்காக
எதற்காகஎனக்காக

திரும்பும் திசையெல்லாம்
தென்றல் போல் ஓடியவள்
திரும்பும் திசையெல்லாம்
தென்றல் போல் ஓடியவள்
திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள்
திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள்
வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன்
வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன்
ஊமை நாடகத்தை உதடுகள் ஆடியதே
உதடுகள் ஆடியதே

தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே
எதற்காக எனக்காக


வசந்தம் சிரித்தாலே
வண்ணத்தேன் பூ மலரும்
வசந்தம் சிரித்தாலே
வண்ணத்தேன் பூ மலரும்
வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும்
அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும்
அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும்
அம்மம்மா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும்
அண்ணனின் மனம் குளிரும்
சிரித்தாலேசிரித்தாலே

ஒரு கண் அழுதாலே
மறு கண் கலங்காதோ
ஒரு கண் அழுதாலே
மறு கண் கலங்காதோ
உனக்கோர் துயர் என்றால்
எனக்கும் பொருந்தாதோ
உனக்கோர் துயர் என்றால்
எனக்கும் பொருந்தாதோ
நீ வந்த தாய் மடியும்
நான் வந்த மடிதானே
நீ வந்த தாய் மடியும்
நான் வந்த மடிதானே
இருமலர் பூத்ததவும்
ஒரு மரக் கிளைதானே
ஒரு மரக் கிளைதானே

தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே
எதற்காக எனக்காக